For Thala Thalapathy Fans



Friday, July 13, 2012

ஊடகத்தினருக்காக திரையிடப்பட்ட அஜித்தின் ''பில்லா-2'' படம் .......


பிரமாண்ட பொருட் செலவில், 'தல' அஜித்தின் நடிப்பில் உருவான 'பில்லா-2' படம், ஊடகத்தினருக்காக சென்னை ஃபோர் பிரேம்ஸ் திரையரங்கில் திரையிடப்பட்டது.
வைட் ஆங்கிள் கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை 'உன்னைப் போல் ஒருவன்' படத்தை இயக்கிய ஷக்ரி டோலட்டி இயக்கியுள்ளார்.
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெற்றி பெற்ற 'பில்லா' படத்துக்கு பின்பு, 'பில்லா எப்படி சர்வதேச தாதாவாக உருவெடுக்கிறார்' என்பதை இந்த 'பில்லா-2' படத்தில் அதிரடி ஆக்ஸன் காட்சிகளோடு சொல்லியிருக்கிறார்கள்.
அகதியாக இருந்து தாதா டேவிட் பில்லாவாக அவதரிக்கும் ஆர்ப்பாட்டமான கேரக்டரில் அஜித், அவருக்கே உரிய ஸ்டைலில் படத்தின் ஆரம்பம் முதல் க்ளைமாக்ஸ் வரை மிரட்டியிருக்கிறார்.
அஜித்துடன் இணைந்து பார்வதி ஓமனக்குட்டன், பிரேசில் அழகி ப்ருனா அப்துல்லா இருவரும் முக்கியமான ரோல்களில் நடித்துள்ளார்கள்.
மனோஜ் கே ஜெயன், சுதான்ஷு பாண்டே, வித்யுத் ஜாம்வால் சர்வதேச கடத்தல் புள்ளிகளாக வந்து 'பில்லா' அஜித்துடன் மோதுகிறார்கள்.
சர்வதேச குற்ற சாம்ராஜ்யத்தை கைப்பற்ற திட்டமிடுகிறார் பில்லா நாயகன் அஜித். பில்லாவை வீழ்த்த அரசியல்வாதிகளும், சர்வதேச தாதாக்களும் வியூகம் அமைக்கிறார்கள்.
எப்படி தன் எதிரிகளை பில்லா அஜித் அதிரடியாக சண்டையிட்டு வீழ்த்துகிறார்? என்பதை ஹாலிவுட் ஸ்டைல் ஆக்ஸன் படமாக ரசிகர்களுக்கு கொடுக்க முயற்சித்துள்ளார்கள்.
டேவிட் பில்லாவின் தாதா வாழ்க்கைக்கதையை இயக்குனர் ஷக்ரி டோலட்டியும், எரிக் பெல்பெர்க் இருவரும் உருவாக்கியுள்ளார்கள். ஷக்ரி திரைக்கதை அமைத்துள்ளார்.
படத்தின் கேரக்டர்களுக்கு இணையாக பெரும்பாலான காட்சிகளில் 'தட தடவென' துப்பாக்கிகள் முழங்கி பேசுகின்றன. படத்தில் அழகிய யுவதியாக பார்வதி ஓமனக்குட்டன் தோன்றியுள்ளார்.
நீச்சல் உடையில் கவர்ச்சி அழகி ப்ருனா சூடேற்றுகிறார். சண்டைக்காட்சிகளில் சீறிப்பாயும் 'புல்லட்'டாக அஜித் மாறியிருக்கிறார். தல அஜித் ரசிகர்களுக்கான படமாக 'பில்லா-2' வெளி வந்துள்ளது.

No comments:

Post a Comment