சிறந்த ஒளிப்பதிவிற்கான சர்வதேச விருதுகளை அள்ளிய சந்தோஷ் சிவன், உருமி படத்தை ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார்.
இதில் ஆர்யா, பிரபு தேவா, ப்ருத்வி ராஜ், தபு, ஜெனிலியா, வித்யா பாலன் என திரையுலக நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றார்கள்.
பாடல்களை கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார். தீபக் தேவ் இசையமைத்துள்ளார்.
இவர்களுடன் திரைப்பட தொகுப்பு-ஸ்ரீகர் பிரசாத், சண்டைக்காட்சிகள்-அனல் அரசு என இப்படத்தில் பணியாற்றியுள்ளனர்.
போர்ட்சுகீசியர்கள் இந்தியாவை ஆக்கிரமிக்க முயன்ற வரலாற்றை சந்தோஷ் சிவன் தனது இயக்கத்தில் கொடுத்துள்ளார்கள்.
இப்படத்தை இளைய தளபதி விஜய் ரசித்து பார்த்துள்ளார். சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவை புகழ்ந்துள்ளார் விஜய்.
உருமியை கலைப்புலி தாணு தயாரித்துள்ளார். இன்று திரைக்கு வந்துள்ள உருமி, உலகம் முழுவதிலும் 250 திரையரங்குகளில் திரையிடப்படுகிறது. |
No comments:
Post a Comment