இளைய தளபதி விஜய்யுடைய ரசிகர்கள் அனைவரும் ஆக்சனையே விரும்புவார்கள்.
சமீபகாலத்தில் விஜய் நடித்து வெளிவந்த போக்கிரி, வில்லு படங்கள் ஆக்சனை மையமாக வைத்தே வெளிவந்தன.
இதையடுத்து காவலன், நண்பன் திரைப்படங்கள் சற்று மாறுதலாக நகைச்சுவையுடன் கூடிய படங்களாக வெளிவந்த போது அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது.
இந்நிலையில் இளைய தளபதி முழுக்க முழுக்க நகைச்சுவை படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார். அதற்கான இயக்குனராக சிவா மனசுல சக்தி, பாஸ், ஓகே.ஓகே படங்களை இயக்கிய ராஜேசுடன் இணைகிறார்.
தற்போது ராஜேஷ் கார்த்தியை வைத்து இயக்க திட்டமிட்டிருப்பதால் விஜய்யை வைத்து இயக்க தாமதம் ஆகும் எனத் தெரிகிறது. |
No comments:
Post a Comment