For Thala Thalapathy Fans



Monday, January 9, 2012

நண்பன் சிறப்பு முன்னோட்டம்!!...

1. இயக்குனர் : சங்கர் 
2. தயாரிப்பாளர் : ராஜு ஈஸ்வரன்
3. திரைக்கதை : சங்கர், மதன் கார்த்தி 
4. கதை : ராஜ் குமார் கிராணி, அபிஜட் ஜோஸி, சேத்தன் பகத் 
5. நட்சத்திரங்கள் : விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ், இலியானா, எஸ்.ஜே. சூர்யா
 6. இசையமைப்பு : ஹாரிஸ் ஜயராஜ் 
7. ஒளிப்பதிவு : மனோஜ் பரமஹம்சா 
8. படத்தொகுப்பு : அன்டனி 
9. கலையகம் : ஜெமினி 
10. வெளியீடு : 12.01.2012

சங்கர், விஜய், ஹரீஸ் ஜெயராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள நண்பன் திரைப்படம் இந்த வருடத்தில் அதிக எதிர்பார்ப்புக்குள்ளான படங்களில் ஒன்று.

நண்பன் திரைப்படமானது 2009 ஹிந்தியில் வெளியான மாபெரும் வெற்றித் திரைப்படமான 3 இடியட்ஸ் திரைப்படத்தின் மீளுருவாக்கம் (Remake).

பிரம்மாண்ட படைப்பாளர் சங்கரின் முதல் ரீமேக் திரைப்படம், விஜய், சங்கர், ஹரீஸ் ஜெயராஜ், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ், இலியானா என ஏராளமான விடயங்கள் படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டுகிறது.

இதன் படப்பிடிப்புக்கள் ஊட்டியில் ஆரம்பமாகி தேராதூன், ஐரோப்பா, அந்தமான், கோயம்பத்தூர் மற்றும் சென்னை என தொடர்ந்து 8 மாதங்கள் படமாக்கப்பட்டது. சங்கரின் இயக்கத்தில் விரைவில் படமாக்கப்பட்ட படம் இதுவே என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரன்சு மொழியின் உப தலைப்புக்களுடன் பிரான்ஸில் வெளியாகவுள்ள முதல் திரைப்படம் என்ற பெருமையுடன் தீபாவெளி வெளியீடாக 12.01.2012 (வியாழக் கிழமை) அன்று உலகம் பூராகவும் வெளியிடப்படவுள்ளது.

No comments:

Post a Comment