For Thala Thalapathy Fans



Tuesday, January 10, 2012

நண்பன் நுழைவுச்சீட்டு விற்பனை அபாரம்: மகிழ்ச்சியில் படக்குழுவினர்...


தமிழ் திரையுலகில் நண்பன் திரைப்படத்திற்கான நுழைவுச் சீட்டு முன்பதிவு ஆரம்பமான சிறிது நேரத்திலேயே பெரிய திரையரங்குகள் அனைத்திலும் 2 நாட்களில் முடிந்துள்ளது.
தமிழ் திரையுலகில் இளையதளபதி விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ், இலியானா நடிப்பில் நண்பன் திரைப்படத்தை ஷங்கர் இயக்கியுள்ளார்.
நண்பனுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, ஜெமினி நிறுவனம் தயாரித்து இருக்கிறது.


நண்பன் திரைப்படம் கடந்த 2011ம் ஆண்டே வெளியீட்டிற்கு தயாராக இருந்தாலும் விஜய் நடிப்பில் வேலாயுதம் படம் வெளியானதால் 2012 பொங்கல் அன்று வெளியீடு என்று அறிவிக்கப்பட்டது.


இந்த எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் வருகிற 12ம் திகதியே படத்தினை வெளியீட படக்குழுவினர் தீர்மானித்து இருக்கிறார்கள்.


நண்பன் படத்திற்கு நுழைவுச்சீட்டு முன்பதிவு ஆரம்பமான சிறிது நேரத்திலேயே பெரிய திரையரங்குகள் அனைத்திலும் முதல் 2 நாட்களில் முடிந்துள்ளது.
ரசிகர்களின் இந்த வரவேற்பால் பெரும் சந்தோஷத்தில் படக்குழுவினர் இருக்கிறார்கள்.

No comments:

Post a Comment