For Thala Thalapathy Fans



Sunday, January 1, 2012

நண்பன் இசை வெளியீட்டு விழா: இலியானா விளக்கம்:::::


தமிழ் திரையுலகில் நண்பன் இசைவெளியீட்டு விழாவில் பங்கேற்காத காரணத்தை இலியானா தெரிவித்துள்ளார்.
திரையுலக நாயகி இலியானா தமிழில் கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் திரைப்படமே தோல்வியைத் தழுவ, தெலுங்கு திரையுலகிற்கு சென்று விட்டார்.


தற்போது தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிற இலியானா இளைய தளபதி விஜய்யுடன் நண்பனுடன் இணைந்துள்ளார்.


சமீபத்தில் நண்பன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தமிழகத்தின் கோயம்புத்தூரில் நடந்து முடிந்தது. இயக்குனர் ஷங்கர், நண்பன் நாயகன்கள் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் மற்றும் எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், அனுயா ஆகியோர் கலந்து கொண்டனர்.


ஆனால் நண்பனின் நாயகியான இலியானாவை ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்திருந்தும் அவரால் கலந்து கொள்ளமுடியவில்லை.


இதுபற்றி இலியானா கூறியதாவது, நண்பன் இசைவெளியீட்டு விழா அன்று எனக்கு கடுமையான காய்ச்சல். ஆகவே என்னால் கலந்து கொள்ள முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment