For Thala Thalapathy Fans



Monday, January 9, 2012

அஜித்தின் பில்லா-2விலும் நடிக்கிறார் நமீதா!!...

'மங்காத்தா' படத்தின் வெற்றியை அடுத்து அஜித் நடித்து கொண்டிருக்கும் படம் பில்லா - 2. இப்படத்தை முதலில் விஷ்ணுவர்தன் இயக்குவதாக இருந்தது, ஆனால் இவர் தெலுங்கில் பிசியானதால் சக்ரி டொலேட்டி கைக்கு மாறியது. தற்போது இப்படத்தை இயக்குகிறார் சக்ரி டொலேட்டி.

அஜித்துடன் ‘பில்லா’ முதல்பாகத்தில் நமீதா சிறப்பான தோற்றத்தில் நடித்திருந்தார். இதை தொடர்ந்து ‘பில்லா 2’ம் பாகத்திலும் நடிக்கிறார் நமீதா. இப்படத்திலும் நமீதாவின் கதாபாத்திரம் கவர்ச்சிகரமாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கபடுகிறது.

தற்போது மீண்டும் தமிழில் வாய்ப்பு தேடி சென்னையில் குடியேறியுள்ளார் நமீதா. சமீபத்தில் இவர் மும்பையை சேர்ந்த வக்கீலை காதல் திருமணம் செய்ய போவதாக பேசப்பட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார் நமீதா.

No comments:

Post a Comment