For Thala Thalapathy Fans



Friday, December 9, 2011

பிரிந்தவர் சேர்ந்தனர்…..விஜய்யால் உடைந்த பகை.....


சேர்ந்தவர் பிரிந்தால் ஏசிக்கொள்வதும், பிரிந்தவர் சேர்ந்தால் ஈஷிக்கொள்வதும் பிரண்ட்ஷிப் ஃபிலாஸபி. இப்படி பிரிந்த பின்பும் ஒருவரையொருவர் ஏசிக் கொள்ளாமல் இருந்தார்கள் கவுதம் மேனனும், அவரது ‘விண்ணை தாண்டி வருவாயா’ ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவும். இப்படத்தின் வெற்றிக்கு பெரும் காரணமாக இருந்தவர் இந்த மனோஜும்தான். ஆனால் இந்த கூட்டணி அடுத்தடுத்த படத்தில் இணைய முடியாதளவுக்கு விழுந்தது திருஷ்டி. டைரக்டர் ஷங்கர் தனது நண்பன் படத்தில் ஒளிப்பதிவு செய்ய அழைத்ததும் கவுதம் மேனனின் பேச்சையும் கேட்காமல் அங்கு போனார் இவர்.
இதன்பின் எந்த சந்தர்பத்திலும் மனோஜை தொடர்பு கொள்ளாமலிருந்தார் கவுதம். ஆனால் எல்லா வைராக்கியங்களையும் பொடி பொடியாக்குகிற அளவுக்கு ஒரு பிரச்சனை. கவுதம் இயக்கத்தில் விஜய் நடிக்கும் யோஹன் அத்தியாயம் ஒன்று படத்தில் யாரை ஒளிப்பதிவாளராக நியமிப்பது என்ற பேச்சு எழுந்தது.
ஏன், விண்ணை தாண்டி வருவாயா பட ஒளிப்பதிவாளர் மனோஜ் இருந்தால் நன்றாக இருக்குமே? என்றாராம் விஜய். அவரே சொல்லிவிட்ட பிறகு, தனது ஜென்ம பகையை பற்றி பேசிக் கொண்டிருந்தால் ஆகுமா? மனோஜுக்கே போன் அடித்தாராம் கவுதம்.
விஜய் புண்ணியத்தால் இப்போது பிரிந்தவர் கூடினர்.

No comments:

Post a Comment