இதன் முதல் கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடக்கின்றது. அடுத்த கட்டமாக ஐரோப்பிய நாடுகளில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
அங்கு புறப்பட்டு செல்வதற்காக அஜீத் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு வந்தார். பாதுகாப்பு சோதனைக்காக நிறைய பயணிகள் அங்கு காத்து நின்றனர்.
அவர்களுடன் அஜீத்தும் நின்று கொண்டிருப்பதை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் அடையாளம் கண்டு அவரை அணுகினர். கூட்டத்தினரோடு செல்லாமல் சிறப்பு வழியில் சென்று பாதுகாப்பு சோதனைகளை முடித்து விமானத்துக்குள் செல்ல அனுமதி அளித்தனர்.
ஆனால் அஜீத் இதனை மறுத்து விட்டார். பயணிகளுடன் வரிசையில் 30 நிமிடம் காத்து நின்று உள்ளே சென்ற அஜீத்தின் செயலை சக பயணிகள் பாராட்டினர். |
No comments:
Post a Comment