விரைவில் ஒரு சேட்டிலைட் சேனலை துவக்கவிருக்கிறார் இளையதளபதி விஜய். இதற்கான பூர்வாங்க பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டது. சேனலின் பெயர் முதற்கொண்டு மற்ற எல்லா விஷயங்களையும் விஜய்யின் மனைவி சங்கீதா அவர்கள் கவனித்துவருகிறார்.
சேனல் தொடக்கம் பற்றிய அறிவிப்பு வரும் பொங்கல் தினத்தன்று அறிவிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சேனலின் தலைமை பொறுப்பை பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் ஏற்கவிருக்கிறார். இவர் தமிழ்நாட்டின் மிகப்பிரபலமான ஒரு பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்தவர் ஆவார்.
பத்திரிக்கையாளர் என்பதையும் தாண்டி தமிழ்நாட்டு மக்களிடையே மிகப் பிரபலமான இவர், விஜய்யின் வேண்டுகோளை ஏற்று இச்சேனலின் தலைமை பொறுப்பை ஏற்கவிருக்கிறார்.
இளையதளபதியின் இந்த முடிவு பற்றிய உங்கள் கருத்துகளையும் தெரிவியுங்கள். நிச்சயமாக விஜயின் கவனத்திற்கு உங்கள் கருத்துகளை எடுத்து செல்வோம்.
all the best anna.
ReplyDelete