விஜயா புரொடெக்சனுக் காக அஜீத் நடிக்கப்போகும் படத்தை இயக்கப்போவது ‘சிறுத்தை’ டைரக்டர் சிவா.
சிறுத்தையை போலவே அஜீத்தை வைத்து இவர் எடுக்கப்போகும் படமும் ஒரு தெலுங்கு படத்தின் ரீமேக் என்று சொல்லபடுகிறது.
ஆனால் அது எந்த படம் என்ற விசயத்தை மட்டும் படு சீக்ரெட்டாக வைத்திருக்கிறார்கள்.
எனென்றால் எந்த படம் என்று சொல்லிவிட்டால், அந்த படத்தை ரீமேக் செய்வதற்குள், அப்படத்திலிருக்கும் முக்கியமான சீன்களை சுட்டுவிடுகிறார்கள் என்பதால் எந்த படம் என்ற விஷயத்தில் ரகசியம் காக்கப்படுகிறதாம்.
இப்படத்தை பற்றி தெரிந்த ஒரே விஷயம் இப்படத்தில் அஜீத்துக்கு ஜோடி அனுஷ்கா.
No comments:
Post a Comment