For Thala Thalapathy Fans



Tuesday, October 4, 2011

அஜித்துடன் பார்வதி ஜோடி செர்ந்ததன் ரகசியம் ..................


அஜித்தை அடுத்து இயக்கப்போவது யார் என்று கோலிவுட் மீடியா ஒருப்பக்கம் கடலை வறுத்துக்கொண்டு இருக்க, அஜித் தற்போது நடித்து வரும் ‘பில்லா-2′ல் அவருக்கு நாயகி யார் என்பதும் சூடான செய்தியாகிவிட்டது. முதலில் மும்பை விளம்பர மாடல் ஹூமா குரேஷியை ஒப்பந்தம் செய்தார்கள். ஹூமாவுக்கு தமிழ் வாயில் நுழைவது படாத பாடுபட அவரை நீக்கியிருக்கிறார்கள். இதை சக்ரியின் உதவியாளரே உறுதிபடுத்துகிறார். மூன்று நாள் படப்பிடிப்பில் புராம்டிங் செய்தும், லிப் சிங் செமத்தியாக சொதப்பியதால் இயக்குநர் அதிரடி முடிவு எடுத்தார் என்கிறார்.
தற்போது ஹூமாவின் இடத்தை அழகாக ஆக்ரமித்து விட்டார் ஒரு கேரள உலக அழகி. கடந்த 2008-ஆம் ஆண்டு ஜோகன் பர்க்கில் நடந்த உலக அழகிப் போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டு இரண்டாவது இடத்தைப் பிடித்தவர்! அவர் பார்வதி ஓமணக்குட்டன். இவரது அழகுமட்டுமல்ல, இவர் அழகாக தமிழ்பேசும் அழகும் அஜித்துக்கு இவரை நாயகி ஆக்கியிருகிறது. ஆக உலகே போற்றும் அழகு இருந்தாலும் தமிழ்சினிமாவில் ஜொலிக்க தமிழ் தெரிந்திருக்க வேண்டியது அவசியம் என்பதை ஓமணகுட்டன் பொட்டில் அடித்து சொல்லியிருக்கிறார்.
இதெல்லாம் இருக்கட்டும்! பார்வதியின் புத்திசாலித்தனத்தை புகழ்கிறார்கள் சக்ரியின் உதவியாளர்கள். கடந்த ஆண்டு நிதின் ராமகிருஷ்ணன் என்ற சினிமா இண்ஸ்டியூட் மாணவர் பரதநாட்டியத்தை மையமாக வைத்து ‘உமா.மகேஷ்வரம்’ என்ற படத்தை தொடங்கினார். இது கதாநாயகியை மையப்படுத்திய படம். இந்த படத்தில் பார்வதிதான் ஹீரோயின். நல்ல பரதநாட்டிய மங்கை என்பதால் பார்வதி ஓமணக்குட்டனை தேர்வு செய்தார்கள். முதல் கட்டமாக இருபது நாள் படப்பிடிப்பும் நடத்தப்பட்டது. ஆனால் நிதிப்பற்றாக்குறையால் படம் அப்படியே நிற்கிறது.
“எனது முதல் பட முயற்சியின் டெவலப்மெண்ட் பற்றி என்னால் எதுவும் சொல்லமுடியாது. என்னை ராசியில்லாதவள் என்று நினைத்தால் இப்போதே சொல்லிவிடுங்கள். எனக்கு டான்ஸ் கான்செர்ட்டுகள் மட்டும் போதும். எனது பாலிவுட் முயற்சியும் பிளாப்தான்” என்றாராம் இயக்குநர் சக்ரியிடம் அதிரடியாக. பாலிவுட்டில் ‘யுனைடெட் சிக்ஸ்’ என்ற படத்தில் நடித்து இருக்கிறாராம் பார்வதி. இது அப்படியே அஜித் காதுக்குப் போக பார்வதிதான் ஹீரோயின் என்றாராம் அஜித்!
சாமர்த்தியமா காரியத்த சாதிச்சிட்டாளே இந்த ஓமணக்குட்டி..!

No comments:

Post a Comment