thalathalapathi |
புதிய தெம்போடு காத்திருக்கிறது வேலாயுதம் டீம். இந்த தெம்புக்கு எஸ்.ஏ.சந்திரசேகர் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்றதும் ஒரு காரணமாக இருக்கலாம். தனது பிள்ளைக்காக அவர் சட்டதிட்டங்களை வளைக்கப் போவதில்லை என்றாலும், மலையை இழுக்கும்போது செடியை பிடித்துக் கொள்வதில்லையா? அப்படிதான் இதுவும்.
ஆஸ்கர் பிலிம்ஸ் என்ற பிரமாண்ட பேனர், வசூல் மன்னன் என்ற பிரமாண்ட அடைமொழி, ரஜினி, அஜீத் வரிசையில் அதிர வைக்கும் ஒப்பனிங் ஹீரோ என்ற மாஸ். இவ்வளவு இருந்தும் இந்த படம் தீபாவளிக்கு வந்துவிடுமா என்ற கேள்வியை அவ்வப்போது எழுப்பி ரசிகர்களை பிபி ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.
இந்த சந்தேகத்தை அவர்கள் கிளப்ப காரணம் சூர்யா நடிப்பில் வெளிவரவிருக்கும் 7 ஆம் அறிவு திரைப்படம்தான். ஏராளமான தியேட்டர்களை கைப்பற்றியிருக்கிறதாம் இந்த படக்குழு. இதிலிருந்து பாதி தியேட்டர்களை மீட்டெடுத்தால்தான் அங்கு வேலாயுதம் படத்தை திரையிட முடியும் என்பதால் அந்த வேலையில் இறங்கியிருக்கிறார்களாம் இப்போது.
வருகிற 20 ந் தேதி இந்த படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் வாங்கப் போகிறார்களாம். ஆனால் அதுவும் தவறான செய்தி. இன்னும் ஒரு பாடல் காட்சியே எடுக்கப்படாமலிருக்கிறது என்று இன்னொரு தகவலை கசிய விடுகிறார்கள் கோடம்பாக்கத்தில்.
சர்க்கரை பொங்கலையும் வச்சுட்டு, சைட் டிஷ்ஷா மிளகாய் பொடியையும் வச்ச மாதிரிதான் இருக்கு கேள்விப்படுகிற எல்லாமே!
No comments:
Post a Comment