For Thala Thalapathy Fans



Wednesday, October 12, 2011

ஷங்கர் இயக்க, அஜீத் நடிக்க இந்தியன் -2 ?? என்ன சொல்கிறார் ஏ.எம் ரத்னம்??????????/

Shankar and Ajithபில்லா 2 நடித்துக் கொண்டிருக்கும் அஜீத்தின் அடுத்தபடம் அநேகமாக இந்தியன் 2 ஆக இருக்கலாம் என்கிறது கோடம்பாக்கம் வட்டாராம்.

இந்தியன் படத்தின் இறுதியில், அதன் அடுத்த பாகம் வரப்போவதை இயக்குநர் ஷங்கர் சூசகமாக குறிப்பிட்டிருப்பார். இந்தப் படத்தை தயாரித்த ஏஎம் ரத்னம்தான், அடுத்து அஜீத்தை வைத்து படம் தயாரிக்கிறார்.

அதேபோல, பாய்ஸ் சமயத்தில் மனக்கசப்பு ஏற்பட்டாலும், ரத்னத்துக்கு இன்னொரு படம் பண்ணித் தருவதாக இயக்குநர் ஷங்கரும் உறுதி தந்திருந்தார்.

எனவே இதுவரை நடக்காமல் இருந்த அஜீத் - ஷங்கர் காம்பினேஷனை இந்த முறை சாத்தியமாக்கிவிடலாம் என ரத்னம் முயற்சிப்பதாகவும், அது இந்தியன் -2 ஆக மலரலாம் என்றும் தகவல் பரபரக்கிறது. அன்னா ஹஸாரே விவகாரம் படுபாப்புலராக உள்ள இந்த நேரத்தில் இந்தியன் 2 எடுப்பது வியாபாரத்தில் அனல் பறக்க வைக்கும் என்பதால் இந்த பேச்சு.

இதுகுறித்து தயாரிப்பாளர் ஏ எம் ரத்னத்தை தொடர்பு கொண்டு விசாரித்தோம். "பேசிக்கிட்டிருக்கோம்," என்று ஒற்றை வார்த்தையில் பதிலளித்தவரை, இந்தியன் -2 உண்மையா என்று மட்டும் சொல்லுங்க என்றோம்.

"எதுவும் நடக்கலாம். இந்தியன்- 2 கூட நல்லாதான் இருக்குல்ல," என்றார் அப்பாவியாய்.

கமல்ஹாசன், சுகன்யா, மனீஷா கொய்ராலா நடித்து வெளியான தமிழில் புதிய புரட்சி படைத்த படம் இந்தியன். இப்படத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் தாத்தா வேடம் வெகு பிரபலமானது. இப்படத்தில் லஞ்சம், ஊழலை எதிர்த்துப் போராடும் இந்தியன் தாத்தா வேடத்தில் சிறப்பாக நடித்ததற்காக கமல்ஹாசனுக்கு தேசிய அளவில் சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது நினைவிருக்கலாம்.

எல்லாம் சரி, கமல்ஹாசன் தரித்த வேடத்தை தாங்கும் அளவுக்கு அஜீத்துக்கு பலம் இருக்கிறதா?

No comments:

Post a Comment