அஜித் குமாரின் 50-வது படமான ‘மங்காத்தா’ திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தில் திரிஷா, லட்சுமிராய், ஆண்ட்ரியா, அஞ்சலி என நான்கு முன்னணி கதாநாயகிகள் நடித்துள்ளனர். இப்படத்தில் லட்சுமிராய் வில்லியாக நடித்திருக்கிறார். இவரது கேரக்டர் இப்படத்தில் நன்றாக இருப்பதாக பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் விளம்பரங்களில் தன்னை ஒதுக்கிவிட்டார்கள் என்று லட்சுமிராய் வருத்தப்பட்டார். இதுகுறித்து அவர் கூறியதாவது;
“நான் நடித்துள்ள ‘மங்காத்தா’ படத்தின் போஸ்டர்களை பார்த்தேன். அதில் நான் இல்லை. இதுபோல் படம் சம்பந்தமான வேறு விளம்பரங்களிலும் எனது படம் இல்லை. அதுமட்டுமின்றி டிவியில் காட்டப்படும் இப்படத்தின் விளம்பரங்களிலும் கூட என்னை காட்டவில்லை.
ஆனாலும் படம் சம்பந்தமான விமர்சனங்களில் என்னை பாராட்டி எழுதியுள்ளார்கள். படத்தை பார்த்தவர்கள் நிறைய பேர் என்னிடம் தொடர்பு கொண்டு நன்றாக நடித்துள்ளதாக பாராட்டினர். இது எனக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது” என்றார்.
No comments:
Post a Comment