இம்முறை அஜித் படம் தோற்காது என்பதை படத்துக்கு உருவான எதிர்பார்ப்பே சொல்லி விட்டது. மங்காத்தாவின் கதையும், அதில் அஜித் கெட்டவனாக நடிக்கிறார் என்பதும், படத்தை ஃபாக்ஸ் ஆபீஸில் கிராண்ட் ஓபனிங் படமாக மாற்றியிருக்கிறது. எந்திரன் படத்துக்கு இணையாக மங்காத்தா படத்தின் டிக்கெட்டுகள் 300 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை கடந்த இரண்டு நாட்களாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைக்கிறது. என்றாலும் அதிகார பூர்வமாக கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 2.8 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது மங்காத்தா.
மங்காத்தா ஆகஸ்ட் 31-ல் வெளியாவது உறுதியானவுடன், செப்டம்பர் முதல்வாரம் ரிலீஸ் ஆக திட்டமிடப்படிருந்த மூன்று படங்கள், இரண்டு வாரங்களுக்கு வெளியீட்டை தள்ளி வைத்திருக்கின்றன.
மங்காத்தாவுக்கு குறைந்தது இரண்டு வாரங்களுக்கு செல்வாக்கு இருக்கும் என்பதால், செப்டம்பர் 16, 23, 30 ஆகிய தேதிகளில் படங்களை வெளியிடலாம் என்று முடிவு எடுத்து இருக்கிறார்கள் மீடியம் பட்ஜெட் படங்களீன் தயாரிப்பாளர்கள். ஹோசிமின் இயக்கத்தில் சத்யராஜ், சாந்தனு நடித்துள்ள ஆயிரம் விளக்கு, ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில், அவரது உதவியாளர் சரவணன் இயக்கத்தில் ஜெய்-அஞ்சலி, அனன்யா நடித்திருக்கும் நடித்திருக்கும் `எங்கேயும் எப்போதும்`, சேரன் தயாரிப்பில், ராஜன் மாதவ் இயக்கத்தில் உருவாகியுள்ள `முரண்`, கண்ணன் இயக்கத்தில் ஜீவா, டாப்ஸி நடித்துள்ள `வந்தான் வென்றான்` ஆகிய படங்களின் ரிலீஸ் செப்டம்பர் 16-ம் தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது.
செப்டம்பர் 23-ம் தேதி களவாணி இயக்குனர் சற்குணம் இயக்கத்தில், விமல் நடித்துள்ள `வாகை சூட வா` ரிலீஸ் ஆகிறது. செப்டம்பர் 30-ஆம் தேதி மனோகர் இயக்கத்தில் நந்தா, பூர்ணா நடித்துள்ள வேலூர் மாவட்டம் ரிலீஸ் ஆகிறது.
No comments:
Post a Comment