For Thala Thalapathy Fans



Wednesday, August 24, 2011

மங்காத்தா அஜித்துக்காக உருவாக்கப்பட்டதல்ல:வெங்கட் பிரபு


Venkat Prabhu says mankatha is not for ajith
மங்காத்தா படத்தின் கதை அஜித்துக்காக உருவாக்கப்பட்டது அல்ல என்று அப்பபடத்தின் டைரக்டர் வெங்கட்பிரபு கூறியுள்ளார். வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜித்-த்ரிஷா நடித்திருக்கும் மங்காத்தா படம் வரும் 30ம்தேதி ரிலீஸ் ஆகவிருக்கிறது. ரசிகர்களில் ஏகோபித்த எதிர்பார்ப்புடன் திரைக்கு வரவிருக்கும் இப்படம் குறித்து தினம் தினம் புதுப்புது தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. இந்நிலையில் மங்காத்தா உருவான கதை பற்றி டைரக்டர் வெங்கட்பிரபு புதிய தகவல் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், மங்காத்தா படத்தின் கதை அஜித்துக்காக உருவாக்கப்பட்டது இல்லை. படத்தில் வரும் விநாயக் கேரக்டர் விவேக் ஒபராய்க்காக உருவாக்கப்பட்டது. முதலில் இந்தக் கதையில் விவேக் ஒபராய்தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் படம் பற்றி அவரிடம் பேசவில்லை. அப்போதுதான் அஜித்திடம் இருந்து ஒரு போன் வந்தது. "அடுத்த படத்துக்கு "மங்காத்தா என்று பெயர் வைத்துள்ளதாக கேள்விப்பட்டேன். நல்ல பெயர். வாழ்த்துகள் என்றார். "ஹாலிவுட்டில் பிரபலமான "தி டார்க் நைட் படத்தில் வரும் ஹெத் லெட்ஜர் கேரக்டரில் நடிக்க வேண்டும் என நினைக்கிறேன். அது போல் ஒரு கதை செய்ய முடியுமா? என அஜித் என்னிடம் கேட்டார். மங்காத்தா அது போன்ற ஒரு கதைதான் என்று சொல்லி கதையின் கருவை சொன்னேன். அவருக்கு பிடித்து விட்டது. "சூப்பர் நானே நடிக்கிறேன் என்று கூறி விட்டார். இது மூன்றே நிமிடங்களில் நடந்த விஷயம். இதுதான் அஜித்தின் "மங்காத்தா உருவான கதை, என்று கூறியிருக்கிறார்.
மங்காத்தா படத்தின் கதை அஜித்துக்காக உருவாக்கப்பட்டது அல்ல என்று அப்பபடத்தின் டைரக்டர் வெங்கட்பிரபு கூறியுள்ளார். வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜித்-த்ரிஷா நடித்திருக்கும் மங்காத்தா படம் வரும் 30ம்தேதி ரிலீஸ் ஆகவிருக்கிறது. ரசிகர்களில் ஏகோபித்த எதிர்பார்ப்புடன் திரைக்கு வரவிருக்கும் இப்படம் குறித்து தினம் தினம் புதுப்புது தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. இந்நிலையில் மங்காத்தா உருவான கதை பற்றி டைரக்டர் வெங்கட்பிரபு புதிய தகவல் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

இது
தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், மங்காத்தா படத்தின் கதை அஜித்துக்காக உருவாக்கப்பட்டது இல்லை. படத்தில் வரும் விநாயக் கேரக்டர் விவேக் ஒபராய்க்காக உருவாக்கப்பட்டது. முதலில் இந்தக் கதையில் விவேக் ஒபராய்தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் படம் பற்றி அவரிடம் பேசவில்லை. அப்போதுதான் அஜித்திடம் இருந்து ஒரு போன் வந்தது. "அடுத்த படத்துக்கு "மங்காத்தா என்று பெயர் வைத்துள்ளதாக கேள்விப்பட்டேன். நல்ல பெயர். வாழ்த்துகள் என்றார். "ஹாலிவுட்டில் பிரபலமான "தி டார்க் நைட் படத்தில் வரும் ஹெத் லெட்ஜர் கேரக்டரில் நடிக்க வேண்டும் என நினைக்கிறேன். அது போல் ஒரு கதை செய்ய முடியுமா? என அஜித் என்னிடம் கேட்டார். மங்காத்தா அது போன்ற ஒரு கதைதான் என்று சொல்லி கதையின் கருவை சொன்னேன். அவருக்கு பிடித்து விட்டது. "சூப்பர் நானே நடிக்கிறேன் என்று கூறி விட்டார். இது மூன்றே நிமிடங்களில் நடந்த விஷயம். இதுதான் அஜித்தின் "மங்காத்தா உருவான கதை, என்று கூறியிருக்கிறார்.

No comments:

Post a Comment