For Thala Thalapathy Fans



Wednesday, August 31, 2011

மணிரத்னம் படத்தில் அஜித்.......................

மணிரத்னம் இயக்கவிருக்கும் புதிய படத்தில் நடிகர் அஜித் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நடிகர் அஜித் தற்போது, "பில்லா-2" படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். பில்லாவுக்காக சென்னைக்கும், ஐதராபாத்துக்கும் பறந்து கொண்டிருக்கும் அவரை, கடந்த சில நாட்களுக்கு முன்பு, டைரக்டர் மணிரத்னம் சந்தித்து சுமார் அரை மணி நேரம் பேசியிருக்கிறார்.

பொதுவாக மணிரத்னம் எந்த ஹீரோவையும் தேடிப் போவதில்லை. கமல்ஹாசனிடம் மட்டும்தான் எவ்வித ஈகோவும் இல்லாமல் அவரது வீட்டுக்கே மணிரத்னம் போவாராம். அப்படியிருக்க அஜித்தை தேடிப் போய் பேசியது ஒட்டுமொத்த திரையுலகையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அதே நேரம் இந்த சந்திப்பின் பின்னணி என்ன? என்றும் திரையுலக புள்ளிகள் அலசிக் கொண்டிருக்கிறார்கள். அந்த அலசலின் முடிவில், விரைவில் இருவரும் இணைந்து ஒரு படத்தை உருவாக்கக் கூடும் என்ற பதில்தான் கிடைத்திருக்கிறதாம். 

No comments:

Post a Comment