For Thala Thalapathy Fans



Monday, August 29, 2011


 விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பில் ஏழைகளுக்கு நலத்திட்டம் உதவிகளுடன் சேர்த்து தன்னுடைய வேலாயுதம் படத்தின் ஆடியோ ரிலீசையும் கோலாகலமாக நடத்தினார் நடிகர் விஜய். ஆஸ்கர் பிலிம்ஸ் சார்பில், ரவிச்சந்திரன் இயக்கத்தில், ஜெயம் ராஜா இயக்கத்தில் விஜய், ஹன்சிகா‌ மோத்வானி, ஜெனிலியா உள்ளிட்டவர்கள் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் படம் வேலாயுதம். ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் ஆடியோ ரிலீஸ், மதுரையில் ரசிகர்கள் முன்னிலையில் நேற்று(28.08.11) நடந்தது. ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியுடன், விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பில் ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

விழாவில் நடிகர் விஜய், 5 பசுமாடுகள், 3 மாணவர்களுக்கு உயர்படிப்பு செலவுகள், 40 மாணவ, மாணவிகளுக்கு கம்யூட்டர், 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு தையல் மெஷின், ஆட்டோ டிரைவரின் குழந்தைகள் 3 பேருக்கு கல்வி உதவித்தொகை உள்பட ஏராளமான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் திரண்டிருந்த ரசிகர்கள் கூட்ட‌த்தில் இருந்து ரசிகர்-ரசிகையை இரண்டு பேரை தேர்ந்தெடுத்து, அவர்களை மேடைக்கு அழைத்து வந்தார். மதுரையை சேர்ந்த ரசிகை உமாமகேஸ்வரி, "வேலாயுதம்" பட ஆடியோவை வெளியிட, தஞ்சையை சேர்ந்த ரசிகர் தீபக் பெற்றுக்கொண்டார்.

விழாவில் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், வேலாயுதம் படத்தின் நாயகி ஹன்சிகா மோத்வானி, தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன், இயக்குனர் ஜெயம்ராஜா, இசையமைப்பாளர் விஜய்ஆன்டனி, பாடலாசிரியர் விவேகா, அண்ணாமலை மற்றும் திரைப்பட வினியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், தொழில் அதிபர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கு மதுரை மாநகர் மாவட்ட தொண்டரணி தலைவர் ஆர்.மகேஸ்வரன் தலைமை வகித்தார். 

No comments:

Post a Comment