தமிழ் சினிமாவில் அவ்வப்போது, அழகு தேவதைகள் அறிமுகமாவது ஒன்றும் புதிதல்ல, ஆனால் அவர்கள் சொல்லும் செய்திகள் கேட்பதற்கு புதிதுதான். அழகிய கண்ணும், பழகிய முகமும், எளிய உடையும், ஏஞ்சல் போல் உருவமும் போல ஒரு பெண் அறிமுகமானால், மழை கூட வெப்பமாக இருக்கும். அப்படி தான் "வெப்பம்" படத்தில் அறிமுகமான பிந்து மாதவி. எந்த ஒரு மொழி படத்தில் அறிமுகமாகும் போது, யாரும் நடிக்கத் தயங்கும் ஒரு கதாபாத்திரத்தில் அசால்ட்டாக நடித்து, அட்ராசக்கை போடவைத்தார். அத்தனை ரசிகர்களையும், தன் உள்ளத்துக்குள் சுருட்டிக் கொண்ட அந்த பிந்து மாதவியின் பேட்டி இங்கே...
* உங்களைப் பற்றி சொல்லுங்க?
வேலூர் இன்ஜினியரிங் கல்லூரியில் பையோடெக் முடித்து, தெலுங்கில், "ஆவக்காய் பிரியாணி" படத்தில் அறிமுகமாகி, தமிழ் மொழியில் "வெப்பம்" படத்தில் அறிமுகமான பிந்து மாதவி நானே தான்.
* அறிமுகப்படத்திலேயே விலைமாது ரோலில் நடிக்க எப்படி தைரியம் வந்தது?
முதலில் அந்த படத்தின் இயக்குநர் ஒரு பெண். அஞ்சனா சொன்ன கதையை கேட்டதும் ரொம்ப பிடித்து போய்விட்டது. ஏற்கனவே அனுஷ்கா, கரீனா கபூர் இப்படி நிறைய பேர் இந்த ரோலில் நடிச்சிருக்காங்க. எனக்கும் இந்த ரோல் மேல ஒரு கண் இருந்தது. "வெப்பம்" படத்திற்காக எந்த ஒரு ஹோம்ஒர்க்கும் நான் செய்யல, அஞ்சனா கூட சில இடங்களில் உள்ள மனிதர்களிடம் பழ சொன்னாங்க, ஆனால் நான் எதுமே செய்யல. இயல்பாக வந்ததை நடிச்சேன். ரசிகர்கள் என்னை ஏற்று கொண்டது ரொம்ப சந்தோஷம்.
* உங்க ரோல் மாடல் யாராவது இருக்காங்களா..? ஓ.... இருக்காங்களே, அனுஷ்கா தான். அவங்க தான் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவங்க கிராப் - பார்த்து, நான் ஆச்சர்யபட்டிருக்கேன்.
* தமிழ்ல எந்த இயக்குநர் படத்தில் நடிக்க ஆசை?
எனக்கு ஷங்கர், மணிரத்னம் படங்களில் ரொம்ப பிடிக்கும். அவர்கள் எடுக்கும் விதம், படத்தின் கதை, சமூகத்திற்கு கொடுக்கும் நல்ல மெசேஜ் என்று எல்லாமே இருக்கும். பெரும்பாலான நடிகைகள் இவங்க படங்களில் தான் நடிக்க விரும்புவாங்க, எனக்கும் அந்த ஆசை இருக்கிறது.
* தமிழ்ல எந்த நடிகரோட ஜோடியாக நடிக்க விரும்புறிங்க?
நான் படிக்கும் போது அஜீத் சார் படங்களை விரும்பி பார்ப்பேன். அவர்கூட நடிக்க விரும்புகிறேன். அடுத்து அதிகப்படியான திறமைகள் இருக்கும் சிம்பு கூடவும் நடிக்க ஆசை. பார்ப்போம் இன்னும் நிறைய டைம் இருக்கே. * என்னென்ன படங்களில் கமிட் ஆகியிருக்கிங்க?விஷ்ணுவர்தன் தம்பி, கிருஷ்ணாவோடு "கழுகு" படத்தில், மூணாறில் டீ எஸ்டேட்டில் வேலை பார்க்கும் பெண்ணாக நடிக்கிறேன். அப்புறம் நகுலுடன் ஒரு படம் பண்ணுகிறேன். தெலுங்கில் ஜமீன்தார் படம். இதுதவிர நிறைய படங்கள் வருது. ஆனால் கால்ஷீட் சொதப்பாம நடிக்க விரும்புகிறேன்.
* இன்ஜினியர் ஆகாம நடிக்க வந்தது பற்றி எப்பவாச்சும் வருத்தப்பட்டு இருக்கிங்களா?
நிச்சயமா இல்லை. ஏன்னா நடிச்சு முடிச்சிட்டா, வேலை இல்லேனு சும்மா இல்லாமா, இன்ஜினியரிங் வேலைக்கு போயிடுவேன்.
* தமிழ் ரசிகர்கள் பற்றி?
எத்தனையோ புதுமுகங்களை வரவேற்று கொண்டாடின மாதிரி, என்னையும் கொண்டாடுறது சந்தோஷமா இருக்கு.

No comments:
Post a Comment