For Thala Thalapathy Fans



Saturday, September 10, 2011

நண்பன் படப்பிடிப்பில் இலியானா LEG முறிவு.............


ஷங்கர் இயக்கும் ‘நண்பன்’ படப்பிடிப்பின் போது நடந்த நடன ஒத்திகையில் கால் தடுமாறி விழுந்ததில் கதாநாயகி இலியானாவின் கால் முறிந்தது. பிரபல தெலுங்கு நடிகை இலியானா. இவர் விஜய் ஜோடியாக ‘நண்பன்’ படத்தில் நடித்து வருகிறார். ஸ்ரீகாந்த், ஜீவா ஆகியோரும் இதில் நடிக்கின்றனர். ‘நண்பன்’ படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. இதில் இலியானா பங்கேற்கும் பாடல் காட்சி ஒன்றுக்காக அவருக்கு நடன பயிற்சி அளிக்கப்பட்டது.
பாலிவுட்டின் பிரபல டான்ஸ் மாஸ்டர் ஃபராஹான் இப் பயிற்சியை அளித்தார். அப்போது இலியானா நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது காலில் பலத்த அடிபட்டது. வலியால் துடித்த அவரை டாக்டர்கள் பரிசோதித்தனர். காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளதைக் கண்டறிந்து சிகிச்சை அளித்தனர். கால் சரியாக மூன்றுவாரங்கள் வரை அவர் ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் டாக்டர்கள் அறிவுறுத்தினர். இதையடுத்து அவர் ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றார். இலியானா தவிர்த்த காட்சிகள் மற்றும் பேட்ச் ஒர்க்கை மட்டும் இப்போது ஷங்கர் மேற்கொண்டுள்ளார்.
இத சாக்கு வச்சாவது நல்லா ரெஸ்ட் எடுக்கலாம்ல…..

Wednesday, September 7, 2011

மங்காத்தா,விளம்பரத்தில் தன்னை ஒதுக்கிவிட்டார்கள்:லக்ஷ்மி ராய்


அஜித் குமாரின் 50-வது படமான ‘மங்காத்தா’ திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தில் திரிஷா, லட்சுமிராய், ஆண்ட்ரியா, அஞ்சலி என நான்கு முன்னணி கதாநாயகிகள் நடித்துள்ளனர். இப்படத்தில் லட்சுமிராய் வில்லியாக நடித்திருக்கிறார். இவரது கேரக்டர் இப்படத்தில் நன்றாக இருப்பதாக பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் விளம்பரங்களில் தன்னை ஒதுக்கிவிட்டார்கள் என்று லட்சுமிராய் வருத்தப்பட்டார். இதுகுறித்து அவர் கூறியதாவது;
“நான் நடித்துள்ள ‘மங்காத்தா’ படத்தின் போஸ்டர்களை பார்த்தேன். அதில் நான் இல்லை. இதுபோல் படம் சம்பந்தமான வேறு விளம்பரங்களிலும் எனது படம் இல்லை. அதுமட்டுமின்றி டிவியில் காட்டப்படும் இப்படத்தின் விளம்பரங்களிலும் கூட என்னை காட்டவில்லை.
ஆனாலும் படம் சம்பந்தமான விமர்சனங்களில் என்னை பாராட்டி எழுதியுள்ளார்கள். படத்தை பார்த்தவர்கள் நிறைய பேர் என்னிடம் தொடர்பு கொண்டு நன்றாக நடித்துள்ளதாக பாராட்டினர். இது எனக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது” என்றார்.

விஜய்-சீமான் சந்திப்பு,மூன்று மணி நேரம் பேச்சு !!!!!!!!!!!!!!!!!!!!


கருப்பு சேலையில் ’இங்க்’ தெளித்த மாதிரி புலப்படாமலே இருந்தது சீமான்- விஜய் இணைந்து உருவாக்கும் புதுப்படம் தொடர்பான உண்மைகள். பல முறை விஜய்யை சந்தித்து கதையை சொல்லி அவரை சம்மதிக்கவும் வைத்திருந்தார் சீமான். இது ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும் போதே இன்னொரு புறம் கவுதம் மேனன், ஏ.ஆர்.முருகதாஸ் என்று கதை கேட்டு கன்பார்ம் பண்ணிக் கொண்டிருந்தார் விஜய்.
கோபம், பகலவன் என்று தலைப்புகள் மாறிக் கொண்டிருந்தனவே தவிர, இந்த பட விஷயத்தில் உருப்படியான ஒரு முன்னேற்றமும் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருந்த சீமான், தனது கொள்கை லட்சியத்திற்காக இன்னும் அதிக நேரம் செலவிட்டுக் கொண்டிருந்தார். இந்த நேரத்தில்தான் கடந்த 5 ந் தேதி சீமானை அழைத்தாராம் விஜய்.
ஒளிப்பதிவாளர் ஏகாம்பரத்தோடு விஜய்யை சந்தித்தார் சீமான். சுமார் மூன்று மணி நேரம் இந்த சந்திப்பு நீடித்ததாம். முடிவு என்ன என்பதை இருவரில் யாராவது ஒருவராவது வாய் திறந்தால்தான் தெரிந்து கொள்ள முடியும் போலிருக்கிறது.

அஜித் படத்துக்கு அவதார் கேமரா................................


‘மங்காத்தா’ படத்தினை தொடர்ந்து தற்போது ‘பில்லா -2′ படத்தில் நடித்து வருகிறார். ‘உன்னைப்போல் ஒருவன்’ இயக்குனர் சக்ரி இயக்கி வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது.
படத்தில் வரும் அஜீத்தின் அறிமுகப் பாடலும், மற்றும் சில காட்சிகளையும் அங்கு படமாக்கி இருக்கிறார்கள். இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடைபெற இருக்கிறது.
படத்தின் ஒளிப்பதிவாளர் ராஜசேகர் ‘பில்லா – 2′விற்காக பிரத்யேக EPIC கேமராவை உபயோகப்படுத்தி வருகிறாராம். ஆசியாவிலேயே ‘பில்லா -2′ படத்திற்கு தான் இந்த கேமராவை முதன்முதலாக பயன்படுத்தி இருக்கிறார்கள். சமீபத்தில் வெளிவந்து உலகெங்கும் பெரும் வரவேற்பை பெற்ற ‘அவதார்’ படத்திற்கும் இந்த கேமராவை தான் பயன்படுத்தினார்கள்.
படம் ஹாலிவுட் தரத்திற்கு இருக்க வேண்டும் என்பதில் இயக்குனர் சக்ரி தீவிரமாக உள்ளாராம்.

Monday, September 5, 2011

விஜயின் எதிர்கால திட்டம்..................

வேலாயுதம், நண்பன் படங்களைத் தொடர்ந்து விஜய், முருகதாஸ் இயக்கத்தில் அடுத்து நடிக்க இருகிறார் என்பது உறுதியாகி இருகிறது.

அதேபோல ஹரி இயக்கத்தில் ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பிலும் விஜய் நடிப்பது உறுதியாகி இருகிறது.

இந்நிலையில் சீமான் இயக்கத்தில் பகலவன் படத்தில் எப்போது நடிப்பார் என்பதற்கு விஜயின் அப்பா எஸ்.ஏ.சி “ அதுபற்றி இப்போதைக்கு எதுவும் சொல்வதற்கில்லை” என்று கூறிவிட்டார். இதனால் சீமான் அடுத்து நடித்துக்கொண்டே விஜய்க்காக காத்திருப்பது என்ற முடிவுக்கு வந்து விட்டராம்.இதற்கிடையில் அடுத்த ஆண்டு செப்டமபரில் விஜய் – கௌதம் வாசுதேவ் மேனன் படம் தொடங்க இருகிறது. ஆனால் அதற்கு முன்பே 2012 ஜனவரியில் மதராஸ்பட்டினம் விஜய் இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடிக்க இருக்கிறார். இதுவும் உறுதியாகி இருகிறது என்கிறார்கள் விஜய் வட்டாரத்தில்.

விஜயை இயக்கும் கதையின் சுருக்கத்தை கேட்ட விஜய், இதற்கான திரைக்கதை எப்போது ரெடியானாலும் நானும் படப்பிடிப்புக்கு ரெடி என்று உறுதி கொடுத்துள்ளாராம்! மொத்தத்தில் கமர்ஷியல் வெற்றி கொடுக்கும் இயக்குனர்கள் எல்லோரையும் வளைக்க ஆரம்பித்து இருகிறார் விஜய்.

ரசிகர்களுக்கு விஜய் எச்சரிக்கை.................


என்னை கடவுளுடன் ஒப்பிட்டு போஸ்டர் ஒட்டினால் கடும் நடவடிக்கை எடுப்பேன் என்று நடிகர் விஜய் தனது ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முடிந்து போன விஷயத்தை சிலர் விஷமாக்க முயற்சிக்கிறார்கள்; அது நடக்காது, என்றும் கூறியுள்ளார்.
நடிகர் விஜய் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சமீபத்தில் மக்கள் இயக்கம் சார்பில் நற்பணி விழாவும், “வேலாயுதம்” படத்தின் இசை வெளியீட்டு விழாவும் மதுரையில் நடந்தது. அப்போது எனது ரசிகர்களில் சிலர் என் மீதுள்ள அன்பின் மிகுதியால், என்ன கடவுளாக சித்தரித்து சுவரொட்டிகள் ஒட்டியிருந்தார்கள். அதைப்பார்த்த அடுத்த வினாடியே ரசிகர்களை அழைத்து, இப்படியெல்லாம் போஸ்டர்கள் ஒட்டக்கூடாது. அதை அகற்றி விடுங்கள் என்று கண்டிப்புடன் கூறினேன். என் வார்த்தைக்கு கட்டுப்பட்டு ரசிகர்கள் உடனே அதனை அகற்றி விட்டனர். இனி இப்படி செய்ய மாட்டோம் என்றும் உத்தரவாதம் தந்தார்கள்.
முடிந்து போன இந்த விஷயத்தை சிலர் விஷமாக்க முயற்சிக்கிறார்கள். நாங்கள் இதயத்தால் ஒன்றிணைந்தவர்கள். எங்களிடையே சாதி, மதம், இனம் போன்ற பேதங்களை உருவாக்கி, எங்களை பிரிக்கவோ, பிளவுபடுத்தவோ யாராலும் முடியாது. நான், சாதி, மத, இனத்துக்கு அப்பாற்பட்டு மனிதர்களை மனிதர்களாக பார்ப்பவன். ஆயிரம் பேர்களை படிக்க வைத்துக்கொண்டிருக்கிறேன். அவர்கள் என்ன சாதி-மதம் என்று எனக்கு தெரியாது. என்னிடம் ஐம்பது பேர் வேலை பார்க்கிறார்கள். எனக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆயிரக்கணக்கில் நற்பணி இயக்கம் மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகள் இருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் என்ன சாதி – மதம் என்று எனக்கு தெரியாது. எனக்கு தெரிந்ததெல்லாம் தமிழ், தமிழினம் ஒன்றேதான்.
ஒரு மனிதரை கடவுளாக சித்தரிப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. அப்படி ஆர்வம் மிகுதியால் என் ரசிகர்கள் செய்த அந்த செயலுக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். என் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன். இனி, வருங்காலங்களில் கடவுளோடு ஒப்பிட்டு சுவரொட்டிகளோ, நோட்டீசுகளோ வெளியிட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பேன் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

Sunday, September 4, 2011

இலங்கை தமிழ் அகதியாக அஜித் ................


இதற்கு முன் அஜித் இத்தனை பெரிய வெற்றியைச் சந்திக்க வில்லை. அஜித் திரைவாழ்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய வாலி, திணா, பில்லா படங்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளியிருகிறது மங்காத்தா படம்.
கடந்த இரண்டு நாட்களில் தமிழகத்தில் மட்டும் 2.8 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறது மங்காத்தா. இந்த வசூல் சாதனை இரண்டு வாரங்களுக்குத் தொடரும் என்கிறார்கள் பாக்ஸ் ஆஃபீஸ் வட்டாரத்தில்.
இது ஒருபுறம் இருக்க அஜித் தற்போது நடித்து வரும் பில்லா இரண்டாம் பாகத்தில் மொத்தமுள்ள 5 பாடல்களில் இரண்டு பாடல்களை படம் பிடித்து முடித்து விட்டார் இயக்குனர் சக்ரி. இந்த பாடல்களில் ஒன்றை ஹைதராபாத்திலும், மற்றொரு பாடலை பாண்டிச்சேரியிலும் படமாக்கியிருகிறார்கள். யுவன் முதலில் இசையமைத்துக் கொடுத்தது இந்த இரண்டு பாடல்களைதானாம்.
இதற்கிடையில் பில்லா இரண்டாம் பாகத்தின் நான்காம் கட்ட படப்பிடிப்பு, தூத்துகுடியில் நடைபெற இருக்கிறது. பில்லா இரண்டி கதைப்படி, தூத்துக்குடி நகரின் மாபியாவாக ரேணிகுண்டா புகழ் தீப்பேட்டி கணேஷன் நடிக்கிறார். இவரை ஒழித்துக் கட்டி தூத்துகுடி மாவட்டத்தின் மாபியா அதிகாரத்தை கைப்பற்றும் பொதுநலம் கொண்ட தாதாவாக அஜித் நடிக்கிறார்.
அஜித்தின் பூர்வீகம் பற்றி படத்தில் நெகிழ்வான விதத்தில் பிளாஷ்பேக் அமைத்திருகிறாராம் இயக்குனர். உலகத்தமிழர்கள் மகிழும் வண்ணம் பில்லா இரண்டில் இலங்கைத் தமிழ் அகதியாக வருகிறார் தல அஜித்! ஒரு சில காட்சிகளில் இலங்கையின் யாழ்மாவட்ட தமிழில் பேசவும் இருகிறாராம் அஜித்! வாவ்!

மங்காத்தா பார்த்து அஜித் ரசிகயான பியா......................


“தல” என்று அழைக்கப்படும் அஜித்க்கு, வளரும் நடிகை ஒருவர் ரசிகையாகி இருக்கிறார். அதுவும் ‘மங்காத்தா’ திரைப்படத்தை பார்த்த பிறகுதான் ரசிகையாகி இருக்கிறார்.
இதுகுறித்து அவருடைய டுவிட்டர் இணைய பக்கத்தில் குறிப்பிட்டுள்ளாவது; “இப்போதுதான் ‘மங்காத்தா’ படத்தை பார்த்துவிட்டு வருகிறேன்.
அஜித் சார் மனதை திருடி விட்டார். படத்தில் அவருடைய நடிப்பு அட்டகாசம். அது இன்னும் மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது. இவர்தான் உண்மையான சூப்பர் ஸ்டார். என்னை மன்னிச்சிடுங்க சல்மான்கான் சார்.
இப்போதிலிருந்து நான் முழுமையான அஜித் ரசிகையா மாறிட்டேன்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார். சரி அந்த நடிகை யார்னுதானே கேக்கறீங்க..? ‘கோ’ படத்தில் நடித்த பியா பாஜ்பாய்தான் அந்த நடிகை.

Saturday, September 3, 2011

மங்காத்தாவுக்காக காத்திருக்கும் படங்கள் ....................


இம்முறை அஜித் படம் தோற்காது என்பதை படத்துக்கு உருவான எதிர்பார்ப்பே சொல்லி விட்டது. மங்காத்தாவின் கதையும், அதில் அஜித் கெட்டவனாக நடிக்கிறார் என்பதும், படத்தை ஃபாக்ஸ் ஆபீஸில் கிராண்ட் ஓபனிங் படமாக மாற்றியிருக்கிறது. எந்திரன் படத்துக்கு இணையாக மங்காத்தா படத்தின் டிக்கெட்டுகள் 300 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை கடந்த இரண்டு நாட்களாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைக்கிறது. என்றாலும் அதிகார பூர்வமாக கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 2.8 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது மங்காத்தா.
மங்காத்தா ஆகஸ்ட் 31-ல் வெளியாவது உறுதியானவுடன், செப்டம்பர் முதல்வாரம் ரிலீஸ் ஆக திட்டமிடப்படிருந்த மூன்று படங்கள், இரண்டு வாரங்களுக்கு வெளியீட்டை தள்ளி வைத்திருக்கின்றன.
மங்காத்தாவுக்கு குறைந்தது இரண்டு வாரங்களுக்கு செல்வாக்கு இருக்கும் என்பதால், செப்டம்பர் 16, 23, 30 ஆகிய தேதிகளில் படங்களை வெளியிடலாம் என்று முடிவு எடுத்து இருக்கிறார்கள் மீடியம் பட்ஜெட் படங்களீன் தயாரிப்பாளர்கள். ஹோசிமின் இயக்கத்தில் சத்யராஜ், சாந்தனு நடித்துள்ள ஆயிரம் விளக்கு, ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில், அவரது உதவியாளர் சரவணன் இயக்கத்தில் ஜெய்-அஞ்சலி, அனன்யா நடித்திருக்கும் நடித்திருக்கும் `எங்கேயும் எப்போதும்`, சேரன் தயாரிப்பில், ராஜன் மாதவ் இயக்கத்தில் உருவாகியுள்ள `முரண்`, கண்ணன் இயக்கத்தில் ஜீவா, டாப்ஸி நடித்துள்ள `வந்தான் வென்றான்` ஆகிய படங்களின் ரிலீஸ் செப்டம்பர் 16-ம் தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது.
செப்டம்பர் 23-ம் தேதி களவாணி இயக்குனர் சற்குணம் இயக்கத்தில், விமல் நடித்துள்ள `வாகை சூட வா` ரிலீஸ் ஆகிறது. செப்டம்பர் 30-ஆம் தேதி மனோகர் இயக்கத்தில் நந்தா, பூர்ணா நடித்துள்ள வேலூர் மாவட்டம் ரிலீஸ் ஆகிறது.

விஜயின் ஜோடியாகிறார் ஏஞ்சலா ஜான்சன் ............

விஜய்யின் அடுத்தபடம் நிச்சயம் சீமானுக்கு இல்லை என்பது உறுதியாகிவிட்டது. அடுத்து அவர் நடிக்கப் போவது ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில்தான்.

இந்தப் படத்துக்கான ஹீரோயின் வேட்டையை இப்போதே தொடங்கிவிட்டனர் படக்குழுவினர்.

இப்போதைய நிலவரப்படி, இந்தாண்டு கிங்ஃபிஷர் காலண்டரை அலங்கரிக்கும் மாடல் அழகியான ஏஞ்சலா ஜான்சன் நடிக்கக் கூடும் என்று தெரிகிறது.

20 வயதேயான ஏஞ்சலா, சென்னையில் பிறந்தவர். இவரது தந்தை மங்களூர் தொழிலதிபர். தாயார் ஐஸ்லாந்துக்காரர்.

ஏற்கெனவே பாலிவுட் படம் ஒன்றில் நடிக்க பேசியுள்ளனர். ஆனால் படம் தொடங்கும் முன்ேப இவருக்கும் ரன்பீர் கபூருக்கும் நெருக்கமான உறவு இருப்பதாகக் கிசுகிசுக்கள் பரவி வருகின்றன.

இந்த நிலையில், இந்திப் படத்தில் அறிமுகமாகும் முன்பே இவர் தமிழில் அறிமுகமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.