For Thala Thalapathy Fans
Friday, April 20, 2012
அஜீத்தை வைத்து படம் இயக்க ஆசை: கௌதம் ...
| தல அஜீத்தை வைத்து படமொன்றை இயக்க ஆசைப்படுவதாக இயக்குனர் கௌதம் மேனன் மீண்டும் தெரிவித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. |
கொலிவுட்டில் மங்காத்தா வெற்றிக்குப் பிறகு அஜித் குமாரின் சந்தை மதிப்பு உயர்ந்ததோடு மட்டுமல்லாமல் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.![]() ஆரம்பத்தில் காக்க காக்க படத்திற்கு அஜீத்திடம் தான் கௌதம் திகதிகள் கேட்டார். ஆனால் சில காரணங்களால் அப்படத்தில் சூர்யா நடித்தார். இதையடுத்து கௌதம் மேனன் அஜித்தை வைத்து படமெடுக்க விரும்பவில்லை என தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் சமீபத்தில் அஜீத்குமாரும் கௌதமும் சந்தித்துக் கொண்டனர். அப்போது கௌதம், உங்களைப்பற்றி நான் எதுவும் கூறவில்லை. வதந்திகள் வெளிவந்துள்ளன என தெரிவித்தார். இதற்கு அஜீத், வதந்திகளைப் பற்றி நான் கண்டுகொள்வதில்லை என்று சாந்தமோடு கூறியுள்ளார். மேலும் அஜீத்தை வைத்து படம் ஒன்று இயக்க ஆசையாக இருப்பதாகவும் கௌதம் தெரிவித்துள்ளார். |
Tuesday, April 17, 2012
சமைத்து, விருந்து பரிமாறி தானே பாத்திரங்களை கழுவி வைத்த அஜீத் !!!!
| அஜீத் குமார் பில்லா 2 குழுவினருக்கு தனது கையாலேயே சமைத்து விருந்து வைத்ததோடு மட்டுமல்லாமல் விருந்தில் பயன்படுத்திய பாத்திரங்களை தானே கழுவி வைத்துள்ளார். |
தல அஜீத் குமார் நன்றாக சமைப்பார் அதுவும் பிரியாணி ஸ்பெஷலிஸ்ட் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இந்நிலையில் பில்லா 2 படக்குழுவினருக்கு அவர் விருந்து வைத்துள்ளார். அதில் தன் கையாலேயே சமைத்த கோழிக்கறி, மீன் வறுவல் என்று பல ஐட்டங்களை பரிமாறி அசத்தி விட்டாராம். படக்குழுவினர் நன்கு சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு கிளம்பி விட்டனர்.ஆனால் தல விருந்தில் பயன்படுத்திய பாத்திரங்களை தானே கழுவி வைத்துள்ளார். மறுநாள் படபிடிப்புக்கு வந்த குழுவினர் இது குறித்து கேள்விப்ட்டு ஆடிப்போய் விட்டனராம். இதுகுறித்து இயக்குனர் ஆர்.டி. ராஜேசகர் கூறுகையில், அஜீத்தின் இந்த செயலைப் பாத்து ஆடிப்போய் விட்டோம். அவரது எளிமையும், கருணை உள்ளமும் எங்களை கவர்ந்து விட்டது. படப்பிடிப்புக்கு வந்தால் அவர் அனைவருக்கு வணக்கம் கூறிவிட்டு தான் தனது இடத்திற்கே செல்வார் என்றார். |
யோஹன் அத்தியாயம் ஒன்று திரைக்கதை தயாராகிவிட்டது: கௌதம் ....
அஜீத்துடன் சினிமாவில் போட்டி உண்டு: விஜய் .....
| கொலிவுட்டில் ரஜினி, கமல் படங்களுக்குள் போட்டி இருப்பது போல் விஜய், அஜீத் இடையே போட்டி நிலவுவதாக நீண்ட காலமாக கூறப்படுகிறது. |
அஜீத், விஜய் இருவருமே திரையுலகில் தங்களுக்கென்று ஒரு பாணியை வைத்து முன்னேற்றம் அடைந்துள்ளனர். இருவர் படங்களும் திரைக்கு வரும் சமயம் அவரவர் ரசிகர்கள் போட்டி போட்டு தோரணங்கள், கட் அவுட்கள் என அமைத்து அமர்க்களப்படுத்துவர்.இந்நிலையில் அஜீத் உங்களுக்கு போட்டியா? என்று விஜய்யிடம் ஊடகத்தினர் கேட்டனர். அப்போது, அவர் கூறியதாவது, அஜீத்தும் நானும் தொடர்பில் இருக்கிறோம். நிறைய விடயங்கள் பற்றி ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்கிறோம். அவர் என் வீட்டுக்கு வருவார். நான் அவரது வீட்டுக்கு செல்வது உண்டு. எங்கள் இருவரது குழந்தைகளும் ஒரே பள்ளியில் படிக்கின்றனர். சினிமாவில் எங்களுக்குள் லேசாக நீயா நானா போட்டி இருக்கலாம். திரையுலகில் ஆரோக்கியமான போட்டி இருப்பது நல்லது தானே. தூள் படத்தில் நடிக்க இயலாமல் போனதற்காக நான் வருத்தப்பட்டது உண்டு. அந்த படத்தின் கதையை இயக்குனர் தரணி என்னிடம் சொன்னார். அதில் நடிக்க வில்லை. படம் பார்த்தபோது சிறப்பாக இருந்தது. நான் நடிக்கும் துப்பாக்கி படம் சிறப்பாக வந்துள்ளது. அந்த படத்துக்கு பின்பு 'யோஹன் அத்தியாயம் ஒன்று' என்ற படத்தில் நடிக்கிறேன் என்று கூறினார். |
Thursday, April 12, 2012
தளபதி ஆந்தம் இசை ஆல்பம் வெளியீடு.........
Sunday, April 8, 2012
அஜித்துடன் குத்தாட்டம் போட்ட பிரேசில் அழகி ....
| அஜித் நடிப்பில் உருவாகி வரும் பில்லா-2 படத்தில் பிரேசிலை சேர்ந்த கேபிரியல் பெர்ட்டான் என்ற அழகி அஜித்துடன் சேர்ந்து ஆட்டம் போட்டு இருக்கிறார். |
அஜித்தின் பில்லா படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமாக பில்லா-2 உருவாகி வருகிறது. சக்ரி டோல்ட்டி இயக்கி வரும் இப்படத்தில் அஜித் ஜோடியாக பார்வதி ஓமணக்குட்டன் நடிக்கிறார்.யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தூத்துக்குடியில் டேவிட்டாக இருந்த அஜித் எப்படி பில்லாவாக மாறினான் என்பதே படத்தின் கதை. படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது. இந்நிலையில் படத்தில் ஒரு பாடல் காட்சியில் பிரேசில் நாட்டை சேர்ந்த கேபிரியல் பெர்ட்டான் என்ற அழகி அஜித்துடன் நடனமாடி இருக்கிறார். இதுகுறித்து கேபிரியல் பெர்ட்டான் கூறுகையில், பில்லா படத்திற்கு முன்பே சக்ரி டோல்ட்டியை நான் சந்தித்து இருக்கிறேன். அப்போது அவரிடம் இந்திய படங்களில் நடிக்க ஆர்வம் இருப்பதாக கூறினேன். அதன்படி பில்லா-2 படத்தில் ஒரு பாட்டில் ஆட வாய்ப்பு கொடுத்தார். எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. அதுவும் அஜித் கூட என்றதும் கூடுதல் சந்தோஷம். முதல் படத்திலேயே அஜித்துடன் நடனமா? என்று எனது நண்பர்களும் கூட ரொம்ப ஆச்சரியப்பட்டார்கள். ஆரம்பத்தில் அவ்வளவு பெரிய ஸ்டார் கூட எப்படி ஆடுவது என்று சற்று தயங்கினேன். ஆனால் அஜித்தே ரொம்ப என்கரேஜ் செய்து என்னை ஆட வைத்தார். அஜித் எப்பவும் தன் வேலையில் முழு ஈடுபாட்டோடு நடிப்பார். அதேசமயம் புதுமுகங்களையும் வரவேற்கும் நற்குணம் கொண்டவர் என்று தெரிவித்தார். மேலும் பில்லா-2 படத்தை தொடர்ந்து தெலுங்கில் ரவி தேஜா மற்றும் பவன் கல்யாண் உடன் ஒரு படத்திலும் கமிட் ஆகி இருக்கிறேன். தொடர்ந்து தமிழ் படத்தில் நடிக்க ஆர்வமாய் இருக்கிறேன் என்று கூறியுள்ளார். |
Thursday, April 5, 2012
யுவன் தயாரிப்பில் தல அஜித் ....
விஜயுடன் நடிக்கும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ...
| கஜினி, 7ஆம் அறிவு ஆகிய வெற்றிப் படங்களின் இயக்குனரான ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது விஜய் நடிக்கும் துப்பாக்கி படத்தை இயக்கி வருகிறார். |
இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு எதிர்வரும் 12ம் திகதி தொடங்குகிறது. மும்பையில் நடைபெறும் சம்பவங்களை கதைக்களமாக கொண்ட இப்படம் ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இவர்களுடன் ஜெயராம், சத்யன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.விஜய் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி இணைந்திருக்கும் முதல் படம் என்பதால் இந்த படத்துக்கு இப்போதே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்திற்கு இசையமைத்து வரும் ஹாரிஸ் ஜெயராஜ் கூறுகையில், இப்படத்தில் மொத்தம் 5 பாடல்கள் என்றும், விரைவில் இப்படத்தின் தீம் மியூசிக் தயாராகி விடும் என்றும் தெரிவித்துள்ளார். பலபேர் இப்படத்தில் நடித்து வந்தாலும், இப்படத்தின் இயக்குனரான ஏ.ஆர்.முருகதாஸ் நடித்திருப்பது சிறப்பம்சமான விடயமாக பேசப்படுகிறது. மேலும் விஜய் வற்புறுத்திக் கேட்டுக் கொண்டதால், இப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் நடித்திருக்கிறார் என்று தகவல் வெளிவந்துள்ளது. |
Monday, April 2, 2012
யாராவது சிறப்பாக நடித்தால் உடனே விருந்து வைத்து பாராட்டும் விஜய்!! ...
யாராவது நடிகர், நடிகையர் சிறப்பாக நடித்தால் உடனே அவர்களை போனில் தொடர்பு கொண்டு பாராட்டுகிறாராம் இளைய தளபதி விஜய்.விஜய் தான் எந்தப் படம் பார்த்தாலும் அதில் சிறப்பாக நடித்திருக்கும் நடிகர், நடிகையரின் நம்பரை வாங்கி செல்போனில் அழைத்து பாராட்டு மழை பொழிகிறாராம்.
விஜயே அழைத்து பாராட்டினால் அவர்களுக்கு உச்சி குளிராமலா இருக்கும். அது மட்டுமின்றி சில நடிகர், நடிகையர்களை வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்து மனம்விட்டுப் பாராட்டுகிறாராம்.
இன்னும் சிலரை ஹோட்டல்களுக்கு அழைத்துச் சென்று விருந்து கொடுத்து வாழ்த்துகிறாராம். விஜய் போனில் பாராட்டினாலே அதை பெரிய விஷயமாக நினைப்பார்கள். அதிலும் அவர் வீட்டிலும், ஹோட்டல்களிலும் விருந்து கொடுத்து வாழ்த்தினால் யாருக்கு தான் பெருமையாக இருக்காது.
சக நடிகர்கள் சிறப்பாக நடித்தால் பெயருக்கு வாவ், ரொம்ப நல்லா நடிச்சிருக்கீங்க என்று சொல்லிவிட்டு செல்பவர்கள் மத்தியில் விஜய் சற்று வித்தியாசமானவர் தானே
விஜயே அழைத்து பாராட்டினால் அவர்களுக்கு உச்சி குளிராமலா இருக்கும். அது மட்டுமின்றி சில நடிகர், நடிகையர்களை வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்து மனம்விட்டுப் பாராட்டுகிறாராம்.
இன்னும் சிலரை ஹோட்டல்களுக்கு அழைத்துச் சென்று விருந்து கொடுத்து வாழ்த்துகிறாராம். விஜய் போனில் பாராட்டினாலே அதை பெரிய விஷயமாக நினைப்பார்கள். அதிலும் அவர் வீட்டிலும், ஹோட்டல்களிலும் விருந்து கொடுத்து வாழ்த்தினால் யாருக்கு தான் பெருமையாக இருக்காது.
சக நடிகர்கள் சிறப்பாக நடித்தால் பெயருக்கு வாவ், ரொம்ப நல்லா நடிச்சிருக்கீங்க என்று சொல்லிவிட்டு செல்பவர்கள் மத்தியில் விஜய் சற்று வித்தியாசமானவர் தானே
Subscribe to:
Posts (Atom)









.jpg)