For Thala Thalapathy Fans



Monday, January 9, 2012

நண்பன் சிறப்பு முன்னோட்டம்!!...

1. இயக்குனர் : சங்கர் 
2. தயாரிப்பாளர் : ராஜு ஈஸ்வரன்
3. திரைக்கதை : சங்கர், மதன் கார்த்தி 
4. கதை : ராஜ் குமார் கிராணி, அபிஜட் ஜோஸி, சேத்தன் பகத் 
5. நட்சத்திரங்கள் : விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ், இலியானா, எஸ்.ஜே. சூர்யா
 6. இசையமைப்பு : ஹாரிஸ் ஜயராஜ் 
7. ஒளிப்பதிவு : மனோஜ் பரமஹம்சா 
8. படத்தொகுப்பு : அன்டனி 
9. கலையகம் : ஜெமினி 
10. வெளியீடு : 12.01.2012

சங்கர், விஜய், ஹரீஸ் ஜெயராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள நண்பன் திரைப்படம் இந்த வருடத்தில் அதிக எதிர்பார்ப்புக்குள்ளான படங்களில் ஒன்று.

நண்பன் திரைப்படமானது 2009 ஹிந்தியில் வெளியான மாபெரும் வெற்றித் திரைப்படமான 3 இடியட்ஸ் திரைப்படத்தின் மீளுருவாக்கம் (Remake).

பிரம்மாண்ட படைப்பாளர் சங்கரின் முதல் ரீமேக் திரைப்படம், விஜய், சங்கர், ஹரீஸ் ஜெயராஜ், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ், இலியானா என ஏராளமான விடயங்கள் படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டுகிறது.

இதன் படப்பிடிப்புக்கள் ஊட்டியில் ஆரம்பமாகி தேராதூன், ஐரோப்பா, அந்தமான், கோயம்பத்தூர் மற்றும் சென்னை என தொடர்ந்து 8 மாதங்கள் படமாக்கப்பட்டது. சங்கரின் இயக்கத்தில் விரைவில் படமாக்கப்பட்ட படம் இதுவே என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரன்சு மொழியின் உப தலைப்புக்களுடன் பிரான்ஸில் வெளியாகவுள்ள முதல் திரைப்படம் என்ற பெருமையுடன் தீபாவெளி வெளியீடாக 12.01.2012 (வியாழக் கிழமை) அன்று உலகம் பூராகவும் வெளியிடப்படவுள்ளது.

ஹிந்தியில் வில்லனாக விஜய்!!!!!!!

வேலாயுதம் வெற்றி  விஜய்யை   உச்சத்திற்கு கொண்டு சென்று உள்ளது.ஆம்  விஜய்க்கு ஹிந்தி பட வாய்ப்பு ஒன்று  வந்து உள்ளது.ஆனால் இந்த வாய்ப்பு ஹீரோவாக அல்ல வில்லனாக.

இந்த படத்தில் ஹீரோ யார் என்று சரிவர தெரியவில்லை.ஆனால் இந்த படத்திற்கு விஜய்க்கு பேசப்பட்ட சம்பளம் 30 கோடிக்குமேல்.ஆனால் விஜய் இந்த படத்தில் நடிப்பாரா  என சரிவர தெரியவில்லை.

விஜய்க்கு வில்லனாக நடிக்கவேண்டும் என்ற ஆசை உண்டு கதை பிடித்தால் இந்த படத்தில் விஜய் நடிப்பது உறுதி .

அஜித்தின் பில்லா-2விலும் நடிக்கிறார் நமீதா!!...

'மங்காத்தா' படத்தின் வெற்றியை அடுத்து அஜித் நடித்து கொண்டிருக்கும் படம் பில்லா - 2. இப்படத்தை முதலில் விஷ்ணுவர்தன் இயக்குவதாக இருந்தது, ஆனால் இவர் தெலுங்கில் பிசியானதால் சக்ரி டொலேட்டி கைக்கு மாறியது. தற்போது இப்படத்தை இயக்குகிறார் சக்ரி டொலேட்டி.

அஜித்துடன் ‘பில்லா’ முதல்பாகத்தில் நமீதா சிறப்பான தோற்றத்தில் நடித்திருந்தார். இதை தொடர்ந்து ‘பில்லா 2’ம் பாகத்திலும் நடிக்கிறார் நமீதா. இப்படத்திலும் நமீதாவின் கதாபாத்திரம் கவர்ச்சிகரமாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கபடுகிறது.

தற்போது மீண்டும் தமிழில் வாய்ப்பு தேடி சென்னையில் குடியேறியுள்ளார் நமீதா. சமீபத்தில் இவர் மும்பையை சேர்ந்த வக்கீலை காதல் திருமணம் செய்ய போவதாக பேசப்பட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார் நமீதா.

Tuesday, January 3, 2012

Velayutham Was Selected As The Best Film By V4 Entertainment......


Velyutham was selected as the Best Film,Dhanush and Anjali were honored with the Best Actor and Best Actress award at the award distribution function held at the Lady Andal School Grounds in Chennai. Every year, V4 Entertainment honors the industry people with awards for their outstanding performance and this year the Best Actor and Actress award went to Dhanush for starring in Aadukalam and Anjali for her performance in Engeyum Eppodhum.
Others who were honored with awards during this event were Sneha, Sathyaraj, Santhana Barathi, Vadivudayan, Karan, TP Gajendran, Pandiarajan, Harris Jayaraj, Saranya, Vaali and Viveka.
Sathyaraj received the Anna Award and Prabhu took home the Periyar Award. The MGR Award went to Santhana Bharathi and Sivaji Award to P Vasu. 

Monday, January 2, 2012

இந்த வருஷம் அஜித் 4 படங்களில் நடிக்கின்றார்!தற்போது கிடைத்த புதிய பரபரப்பு செய்தி!!!!!

சற்று நேரத்திற்கு முன்னர் ஒரு புதிய தகவல் வந்துள்ளது அஜித் குமார் ஒரு புதிய படத்தின் கதையை ஓகே சொல்லி உள்ளார் இந்த படத்தின் கதையை சொல்லியவர் தெய்வதிருமகள் படத்தின் இயக்குனர் விஜய் தான் அந்த அதிஷ்டசாலி ஏற்கனவே விஜய் தலயை  வைத்து கிரீடம் படத்தை இயக்கியுள்ளார்.

தற்போது விஜய் விக்கிரமை வைத்து தாண்டவம் படத்தை இயக்கிவருகிறார் இந்த படம் முடிந்தவுடன் தலயை வைத்து படம் எடுக்க போவதாக தகவல்கள் வந்துள்ளது இந்த தகவலை தந்தவர் கலை இயக்குனர் சந்தானம் இவர் தான் தெய்வதிருமகள் படத்தின் கலை இயக்குனராக பணியாற்றியவர்.

இவர் தாண்டவம் படத்தில் விஜய் உடன் பணியாற்ற முடியாமல் போனதாகவும் தல படத்தில் பணியாற்ற உள்ளதாகவும் தெருவித்தார்.

நண்பன், வேட்டை திரைப்படங்களுக்கான வெளியீட்டு திகதிகள் அறிவிப்பு...


தமிழ் திரையுலகில் வருகிற பொங்கலுக்கு நண்பன், வேட்டை திரைப்படங்கள் வெளியிடப்படுகின்றன.
தமிழ் திரையுலகில் பெரிய இயக்குனர்கள் இயக்கியுள்ள நண்பன், வேட்டை திரைப்படங்கள் பொங்கலுக்கு திரையிடப்பட உள்ளன.
இயக்குனர் ஷங்கரின் நண்பனில் இளையதளபதி விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோர் நாயகன்களாக நடித்துள்ளனர்.


நண்பன், பாலிவுட்டில் வெளியான 3 இடியட்ஸ் திரைப்படத்தின் ரீமேக் ஆகும். அடுத்ததாக மாதவன், ஆர்யா நடித்துள்ள வேட்டை திரைப்படத்தை இயக்குனர் லிங்குசாமி இயக்கியுள்ளார்.


நாயகிகளாக சமீரா ரெட்டி, அமலா பால் நடித்துள்ளார். ஆர்யா, மாதவன் இருவரும் அண்ணன், தம்பியாக நடித்துள்ளனர். நண்பன், வேட்டை ஆகிய இந்த இரண்டு திரைப்படங்களும் வருகிற பொங்கல் தின கொண்டாட்டமாக தமிழ்நாட்டில் திரையிடப்படுகிறது.
வருகிற 12 ம் திகதி சென்னையில் 20க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் நண்பன், வேட்டை திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.

அஜீத்தின் அதிரடி திட்டம்? ..

மங்காத்தாவுக்கு பிறகு அடங்கிக்கிடந்த அஜீத்தின் மார்க்கெட் எகிறத் தொடங்கியிருக்கிறது. இதனால் பில்லா-2 படம் இதுவரை அஜீத் படங்கள் தயாராகாத அளவுக்கு மெகா பட்ஜெட்டில் உருவாகிறது.

அதேபோல் இதன்பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கவுள்ள புதிய படமும் மெகா படமாகிறது. இப்படம் விஜயா கம்பைன்ஸ் தயாரிக்கும் படம் என்பதோடு, நாகிரெட்டியின் 100வது பிறந்தநாள் படம் என்பதால் அதிரடி படமாக உருவாக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.



 இதனால் இனி தான் மெகா பட்ஜெட் படங்களில் மட்டுமே நடிப்பது என்று முடிவில் இருக்கிறார் அஜீத். அதனால் புதிதாக தன்னிடம் கதை சொல்ல வரும் டைரக்டர்களிடம் கதையை கேட்கும் முன்பு படத்தை தயாரிக்கும் கம்பெனி குறித்த விவரங்களை கேட்டறிந்த பின்னரே கதையையே கேட்கத் தொடங்குகிறார் அஜீத்.

Sunday, January 1, 2012

Nanban Certified In 2011....


Trade sources say that Nanban has been certified during the fag end of 2011. This means, the film will qualify for 2011 awards. The film has been well-received by the Censor Board officials and they have certified it with a clean U.

Nanban is from director Shankar who has tried out a remake for the first time in his successful career. It is the remake of the Hindi movie 3 Idiots. Vijay, Jiiva, Srikanth, Ileana, Sathyaraj, SJ Suryah and others play vital roles in Naban. Harris Jayaraj has scored the music for this film.

நண்பன் இசை வெளியீட்டு விழா: இலியானா விளக்கம்:::::


தமிழ் திரையுலகில் நண்பன் இசைவெளியீட்டு விழாவில் பங்கேற்காத காரணத்தை இலியானா தெரிவித்துள்ளார்.
திரையுலக நாயகி இலியானா தமிழில் கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் திரைப்படமே தோல்வியைத் தழுவ, தெலுங்கு திரையுலகிற்கு சென்று விட்டார்.


தற்போது தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிற இலியானா இளைய தளபதி விஜய்யுடன் நண்பனுடன் இணைந்துள்ளார்.


சமீபத்தில் நண்பன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தமிழகத்தின் கோயம்புத்தூரில் நடந்து முடிந்தது. இயக்குனர் ஷங்கர், நண்பன் நாயகன்கள் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் மற்றும் எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், அனுயா ஆகியோர் கலந்து கொண்டனர்.


ஆனால் நண்பனின் நாயகியான இலியானாவை ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்திருந்தும் அவரால் கலந்து கொள்ளமுடியவில்லை.


இதுபற்றி இலியானா கூறியதாவது, நண்பன் இசைவெளியீட்டு விழா அன்று எனக்கு கடுமையான காய்ச்சல். ஆகவே என்னால் கலந்து கொள்ள முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

HAPPY NEW YEAR TO ALL.........

அல்டிமேட் ஸ்டார் அஜித் மற்றும் இளைய தளபதி விஜய் ரசிகர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.