For Thala Thalapathy Fans



Sunday, October 9, 2011

யோஹன் அத்தியாயம் ஒன்றின் கூட்டணி இரகசியம்


Add caption
யோஹன் அத்தியாயம் ஒன்றின் கூட்டணிக்கு முக்கிய காரணமே ஏ.எம் ரத்னம் தான் என்கிறது கோடம்பாக்க வட்டாரம்.
கெளதம் வாசுதேவ் மேனன் தயாரித்து இயக்கும் யோஹன் அத்தியாயம் ஒன்று படத்தில் விஜய் நடித்து வருவது நாம் அனைவருக்கும் தெரிந்த விடயம்.
ஆனால் இந்த கூட்டணியை சேர்த்து வைத்தது ஏ.எம்.ரத்னம் என்பது நாம் யாருக்கும் தெரியாது.
விஜய்யிடம் கால்ஷீட் வாங்கி இயக்குனர் கெளதமை ஆலோசனைக்காக உட்கார வைத்தது ஏ.எம்.ரத்னம்தான் என்கிறது கோடம்பாக்க வட்டாரம்.
கதை விஜய்க்குப் பிடித்துப்போனதால், படத்தை நானே தயாரிக்கிறேன் என்று படத்தை கெளதம் ஆரம்பித்துவிட்டாராம்.
படப்பிடிப்புகள் அமெரிக்காவில் ஆரம்பமாகி ஐரோப்பாவில் முக்கிய இடங்களிலும் எடுக்கப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
பெரும்பாலான படப்பிடிப்புகள் நியூயார்க்கில் எடுக்கப்படுகிறது.

VIJAY TO WORK WITH VIJAY.................


Director Vijay would work with actor Vijay is a longtime buzz, which is likely to become a reality soon. If sources are to be believed, the Ilayathalapathy is keen to join hands with the 'Madrasapattinam' and 'Deiva Thirumagal' director, sometime next year.
"By the first quarter of 2012, both would become free, as the actor would complete Yohan Adhyayam Ondru with Gautham Vasudev Menon and the director would finish off his yet-to-be-titled film with Vikram. They would start their project after that," sources say.
Remember circles close to Vijay said recently that his forthcoming films would be with established directors alone, as the actor wants to deliver handful of big hits in the next five years, before he would start focusing on politics in a full-fledged manner.
Apparently proving this, Vijay's next 'Velayudham' is directed by 'Jayam' Raja, 'Nanban' by Shankar and 'Yohan Adhyayam Ondru' by Gautham Vasudev Menon. In contrary, in the last couple of years, two of his films ('Vettaikaran' and 'Sura') were with budding directors.

தல straight forward,தளபதி style hero-----த்ரிஷா !!!!!!!!!


‘தல’ அஜீத் குமார் ரொம்ப ஸ்ட்ரெய்ட் பார்வர்ட் என்று கூறியுள்ளார் த்ரிஷா.
நடிகை த்ரிஷா அஜீத் குமாருடன் கிரீடம், மங்காத்தா என்ற 2 படங்களில் நடித்துள்ளார். அதில் மங்காத்தா சூப்பர் ஹிட்டாகியுள்ளது. இதனால் த்ரிஷா மகிழ்ச்சியாக உள்ளார். சின்ன கதாபாத்திரமாக இருந்தாலும் தனக்கு முக்கியத்துவம் தருவதாக இருந்ததால் தான், தான் அதில் நடித்ததாக கூறுகிறார் த்ரிஷா.
அஜீத்துடன் 2 படம் நடிச்சிருக்கீங்க, அவரைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, அவர் ஸ்ட்ரெய்ட் பார்வர்ட். நேரடியாக எதையும் பேசக் கூடியவர், யாரையும் முன்னால் விட்டு பின்னால் பேச மாட்டார். எதுவாக இருந்தாலும் முகத்துக்கு நேரே பேசி விடுவார் என்றார்.
சரி விஜய் கூட நீங்க நடிச்ச கில்லி படத்தில் வரும் அப்படி போடு பாட்டு இன்னமும் தாளம் போட வைக்கச் செய்கிறது. த்ரிஷா, விஜய் ஜோடி சேர்ந்தாலே ஹிட் என்றெல்லாம் பேசப்படுகிறது. நீங்கள் இருவரும் சேர்ந்து ஏற்கனவே நிறைய படங்கள் நடித்திருக்கிறீர்கள். உங்கள் நண்பர் விஜய் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன் என்றதற்கு விஜய் ரொம்ப ஸ்டைலான நடிகர் என்று கூறினார்.
‘தல’ ஸ்ட்ரெய்ட் பார்வர்ட், ‘இளைய தளபதி’ ஸ்டைல் அப்போ ‘சீயான்’ விக்ரம் பற்றி என்ன நினைக்கிறீர்கள், அவர் திறமைகளின் மொத்த உருவம் என்று பளிச்சென்று பதில் கூறினார் த்ரிஷா.
ஆனால், சிம்பு பற்றி த்ரிஷா எதுவும் சொல்லவில்லை…!

வேலாயுதம் வெற்றி பெறுமா????????????


நீண்டதொரு இடைவெளிக்குப்பின்னர் மிகுந்த எதிர்பார்ப்புடனும் விஜய் ரசிகர்களின் அதீத எதிர்பார்ப்புடனும் தீபாவளியன்று வெளிவர இருக்கும் வேலாயுதம் வெற்றி பெறுமா?
நிச்சயமாக முன்னைய விஜய் படங்களை போல் அல்லாது வேலாயுதம் சிறப்பாக வரும் என்பதில் சந்தேகமில்லை. ஏற்கனவே வந்து ஹிட்டாகிய பாடல்களும், நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய வேலாயுதம் ட்றெயிலரும் படம் தோற்கும் என்று கூறிய பலருக்கும் வேலாயுதம் பற்றி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் எல்லோரும் விஜயின் சிக்ஸ் பக் பற்றியே பேச்சு. அது ஊசி, கிராபிக்ஸ் என்று சிலர் கூறினாலும் நிச்சயம் அப்படி கூறுபவர்களுக்கும் ஓர் எதிர்பார்ப்பு உண்டு என்பதில் சந்தேகமில்லை.
அதேசமயம் ட்றெயிலர் பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது.. அதாவது இந்தளவு ஆக்‌ஷனை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பதே.
இதற்கு எடுத்துக்காட்டாக காவலனுக்கு முன்னர் வந்த ஐந்து படங்களின் தோல்வியை கூறினாலும் அவற்றின் தோல்விக்கு ஆக்‌ஷன் மட்டுமே காரணமாகாது. குருவி போன்ற அதீத, மக்கள் நம்பமுடியாத, லாஜிக் இல்லாத ஆக்‌ஷனும், ஓவர் பஞ்ச் வசனங்களுமே அவற்றின் தோல்விக்கு காரணமாக இருந்தன. அதை விட அவற்றில் கதை குறைவாகவும் , சில நல்ல கதைகள் கூட விஜய்க்காக மாற்றப்பட்டு சிதைக்கப்பட்டும் வந்திருந்தன. அதனாலேயே சில படங்கள் விஜய் ரசிகர்களாலேயே ஏற்கப்படாமல் போயின.
வேலாயுதத்துக்கும் இதே நிலையா என்று பார்த்தால்.. இருக்கலாம் அல்லது வெற்றி பெறலாம். ஆனால் நிச்சயம் ஆக்‌ஷன் தோல்விக்கான காரணமாக இருக்கப்போவதில்லை. படத்தின் கதை சிறப்பாக வருமிடத்து நிச்சயம் வேலாயுதம் மிகப்பெரிய வெற்றியடையும் என்பதில் சந்தேகம் இல்லை. வேலாயுதம் படத்தின் கதை தெலுங்கு ஆசாத்தின் தழுவல். ஆனால் இன்றைய காலத்திற்கு ஏற்ப மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று ஏற்கனெவே ராஜா கூறியிருந்தார்.
அதனால் கதையும் சிறப்பாக வரும் என்று நம்பலாம். விஜயின் அதீத பில்ட் அப்புகள், ஓவர் பஞ்ச் வசனங்கள் தவிர்க்கப்படுமிடத்து வேலாயுதம் பெரிய வெற்றிதான். இன்னொரு விஷயம் கில்லியில் கூட பஞ்ச் வசனங்கள் இருந்தாலும் வேகமான திரைக்கதையாலும், திணிக்கப்பட்ட பஞ்ச் வசனங்களாக இல்லாமல் தேவையான இடங்களில் மாத்திரம் பயன்படுத்தியதாலும் அது விஜய் ரசிகர்களால் மாத்திரமன்றி ஏனையவர்களாலும் ஏற்கப்பட்டிருந்தது.
எது எப்படியோ.. வரும் 25 ஆம் திகதி முடிவு தெரிந்துவிடும்
ஆனால் நான் உட்பட ( ஹி ஹி ) விஜய் ரசிகர்களுக்கு வேலாயுதம் மிகப்பெரிய விருந்தாகவே இருக்கப்போகிறது. காரணம் 10 மாதத்திற்கு பின்னர் வரும் விஜய் படம் என்பதாலும், காவலனில் அமைதியான விஜயை பார்த்துவிட்டு அதிரடியான விஜயை பார்க்கப்போவதாலும், நிச்சயமான என் போன்ற விஜய் ரசிகர்களுக்கு இது பெரும் விருந்துதான்.

Tuesday, October 4, 2011

அஜித்துடன் பார்வதி ஜோடி செர்ந்ததன் ரகசியம் ..................


அஜித்தை அடுத்து இயக்கப்போவது யார் என்று கோலிவுட் மீடியா ஒருப்பக்கம் கடலை வறுத்துக்கொண்டு இருக்க, அஜித் தற்போது நடித்து வரும் ‘பில்லா-2′ல் அவருக்கு நாயகி யார் என்பதும் சூடான செய்தியாகிவிட்டது. முதலில் மும்பை விளம்பர மாடல் ஹூமா குரேஷியை ஒப்பந்தம் செய்தார்கள். ஹூமாவுக்கு தமிழ் வாயில் நுழைவது படாத பாடுபட அவரை நீக்கியிருக்கிறார்கள். இதை சக்ரியின் உதவியாளரே உறுதிபடுத்துகிறார். மூன்று நாள் படப்பிடிப்பில் புராம்டிங் செய்தும், லிப் சிங் செமத்தியாக சொதப்பியதால் இயக்குநர் அதிரடி முடிவு எடுத்தார் என்கிறார்.
தற்போது ஹூமாவின் இடத்தை அழகாக ஆக்ரமித்து விட்டார் ஒரு கேரள உலக அழகி. கடந்த 2008-ஆம் ஆண்டு ஜோகன் பர்க்கில் நடந்த உலக அழகிப் போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டு இரண்டாவது இடத்தைப் பிடித்தவர்! அவர் பார்வதி ஓமணக்குட்டன். இவரது அழகுமட்டுமல்ல, இவர் அழகாக தமிழ்பேசும் அழகும் அஜித்துக்கு இவரை நாயகி ஆக்கியிருகிறது. ஆக உலகே போற்றும் அழகு இருந்தாலும் தமிழ்சினிமாவில் ஜொலிக்க தமிழ் தெரிந்திருக்க வேண்டியது அவசியம் என்பதை ஓமணகுட்டன் பொட்டில் அடித்து சொல்லியிருக்கிறார்.
இதெல்லாம் இருக்கட்டும்! பார்வதியின் புத்திசாலித்தனத்தை புகழ்கிறார்கள் சக்ரியின் உதவியாளர்கள். கடந்த ஆண்டு நிதின் ராமகிருஷ்ணன் என்ற சினிமா இண்ஸ்டியூட் மாணவர் பரதநாட்டியத்தை மையமாக வைத்து ‘உமா.மகேஷ்வரம்’ என்ற படத்தை தொடங்கினார். இது கதாநாயகியை மையப்படுத்திய படம். இந்த படத்தில் பார்வதிதான் ஹீரோயின். நல்ல பரதநாட்டிய மங்கை என்பதால் பார்வதி ஓமணக்குட்டனை தேர்வு செய்தார்கள். முதல் கட்டமாக இருபது நாள் படப்பிடிப்பும் நடத்தப்பட்டது. ஆனால் நிதிப்பற்றாக்குறையால் படம் அப்படியே நிற்கிறது.
“எனது முதல் பட முயற்சியின் டெவலப்மெண்ட் பற்றி என்னால் எதுவும் சொல்லமுடியாது. என்னை ராசியில்லாதவள் என்று நினைத்தால் இப்போதே சொல்லிவிடுங்கள். எனக்கு டான்ஸ் கான்செர்ட்டுகள் மட்டும் போதும். எனது பாலிவுட் முயற்சியும் பிளாப்தான்” என்றாராம் இயக்குநர் சக்ரியிடம் அதிரடியாக. பாலிவுட்டில் ‘யுனைடெட் சிக்ஸ்’ என்ற படத்தில் நடித்து இருக்கிறாராம் பார்வதி. இது அப்படியே அஜித் காதுக்குப் போக பார்வதிதான் ஹீரோயின் என்றாராம் அஜித்!
சாமர்த்தியமா காரியத்த சாதிச்சிட்டாளே இந்த ஓமணக்குட்டி..!

வேலாயுதம் நியூ ட்ரைலர்.கலக்கல்!!!!!!!!!!!!!!!!


Monday, October 3, 2011

ஒரு மாதத்தில் 80 கோடிசம்பாதித்த "தல"யின் மங்காத்தா


அல்டிமேட் ஸ்டார் அஜித்குமாரின் 50 –வது படம் ‘மங்காத்தா’. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். அஜித்துடன் ஆக்ஷன் கிங் அர்ஜுன், திரிஷா, ஆண்ட்ரியா, லட்சுமிராய், அஞ்சலி, பிரேம்ஜி அமரன் என ஒரு நட்சத்திரப்பட்டாளமே நடித்திருந்தது. கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி திரைக்கு வந்த இப்படம், இந்த ஒரு மாதத்திற்குள் 80 கோடி ரூபாயினை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. தமிழ் படத்திற்கு வசூலா தொகை இது.
இதே படம் தெலுங்கில் கேம்ப்ளர் என்ற பெயரிலும், மலையாளத்தில் இதே பெயரிலும் டப் செய்து வெளியிட்டிருக்கிறார்கள். அதனுடைய வசூல் தொகைகளையும் சேர்த்தால் 110 கோடியை தாண்டும் எனத் தெரிகிறது.

Saturday, October 1, 2011

VIJAY SIGNED A NEW PROJECT................


Vijay has been signed up a major telecom company to promote their brand. The star has been paid a handsome amount for this advertisement and he has allotted a three day call sheet for it. Vijay is busy with the promotional work of Velayutham right now but is expected to take some time for this ad.
Kollywood stars have been the most sought after to endorse leading brands and several stars including Vijay has done it in the past. It may be recalled that Vijay was seen endorsing brands like Coca Cola, Fanta and Joy Alukas.

வெங்கட் பிரபுக்கு பதில் லாரன்ஸ் :"தல"யின் திடீர் முடிவு


தன் வீட்டு ஹோம் தியேட்டரில் கடந்த வாரம்தான் ‘காஞ்சனா’ படம் பார்த்தாராம் அஜித். அசந்தே போய்விட்டார். லாரன்சை பார்க்கணும், பாராட்டணும். கொஞ்சம் வரச் சொல்றீங்களா? என்றாராம் உதவியாளர்களிடம். தேடிப்போன சாரல் மேலே வந்து விழுந்த கதையாக சிலிர்த்துப் போனராம் லாரன்ஸ். விழுந்தடித்துக் கொண்டு ஓடியிருக்கிறார் அஜித்தை சந்திக்க. இருவரும் மணிக்கணக்காக பேசிக் கொண்டிருந்தார்களாம்.
இந்த படத்தின் ஸ்கீரின் ப்ளே எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு என்று கூறிய அஜித், அப்படியே எனக்கும் ஒரு கதை சொல்லுங்க. சேர்ந்து பண்ணலாம் என்று கூறினாராம். அதற்கும் காரணம் இருந்தது. விஷ்ணுவர்தன் படத்திற்கு பிறகு வெங்கட்பிரபு இயக்கும் படத்திற்கு கால்ஷீட் தருகிற எண்ணத்தில் இருந்தாரல்லவா? சமீபத்திய சோனா-சரண் கோளாறுகளால் வெங்கட்பிரபுவுக்கு படம் பண்ணுகிற திட்டத்தை கைவிட்டு விட்டாராம்.
அவருக்கு பதிலாகதான் லாரன்சுடன் படம் பண்ணுகிற ஆசை வந்திருக்கிறது அஜித்திற்கு. இந்த சந்திப்பில் ஏராளமாக பேசிய பின் அஜித் கோவா சென்று விட்டார். லாரன்ஸ் ஐதராபாத் சென்று விட்டார். ஆனாலும் போனில் தொடர்கிறதாம் கதைப்பேச்சு!
சே.. அடிச்சாலும் அதிர்ஷ்டம் இப்டிலப்பா அடிக்கணும்……..

மங்காத்தா பார்க்கணும்......வெங்கட் பிரபுவிற்கு சல்மான் கான் போன் !!!!


வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்ற வழக்கத்தை அடித்து நொறுக்குகிறார்கள் நம்ம ஊர் இயக்குனர்களும், அவர்கள் இயக்கிய படங்களும். சல்மான் கான், ஷாரூக்கான் என்று கான்களே கவனம் வைக்கிற அளவுக்கு சிறப்பு ’பொருளாதார’ மண்டலமாகிவிட்டது கோடம்பாக்கம்.
ஒரு சமீபத்திய ஆச்சர்யம் இது. மங்காத்தா படத்தின் திருட்டு விசிடியை பார்த்தே இம்ரஸ் ஆகிவிட்டாராம் சல்மான். இதன் நல்ல பிரிண்ட்டை இன்னொரு முறை பார்க்க வேண்டும் என்ற ஆவல் கிளம்பிவிட்டது அவருக்கு. சென்னையிலிருக்கும் வெங்கட்பிரபுவுக்கே போன் அடித்துவிட்டாராம். உங்க மங்காத்தா பார்த்தேன். பிரமாதமா இருந்திச்சு. ஆனால் பிரிண்ட் சரியில்லாத ஒரு டி.வி.டியில் பார்க்கும்படி ஆகிருச்சு. நல்ல பிரிண்ட் ஒன்று அனுப்பி வைக்க முடியுமா என்றாராம்.
அவரே லைனில் வந்தபிறகு ஆடிப்போனார் வெங்கட். உடனடியாக ஒரு பிளைட்டில் நல்ல குவாலிடியான டிஜிட்டல் பிரிண்ட்டையே அனுப்பி வைத்தாராம். வெங்கட்டிடமே இப்படி பாராட்டிய சல்மான் அஜீத்திடம் பேசாமலா இருந்திருப்பார்?