| மிஷ்கினின் கனவுப்படமான முகமூடியின் இசைக்குறுந்தகடை இளைய தளபதி விஜய் வெளியிட்டார். | 
தமிழ் திரையுலகில் முதன்முறையாக உருவாகும் சூப்பர் ஹீரோவின் கதையே முகமூடி. இப்படத்தில் ஜீவா சூப்பர் ஹீரோவாக நடிக்கிறார். ஜீவாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.இவர்களுடன் நரேன், நாசர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு கிரிஷ்ணகுமார் இசையமைத்துள்ளார். ஏற்கனவே முகமூடியின் டிரைலர் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இன்று முகமூடியின் இசை வெளியிடப்பட்டது. இவ்விழாவில் இளைய தளபதி விஜய், இயக்குனர் மிஷ்கின், ஜீவா, நரேன், பூஜா ஹெக்டே ஆகியோர் கலந்து கொண்டனர். இசைக்குறுந்தகடை இளைய தளபதி விஜய் வெளியிட கன்னட நடிகர் புனித்குமார் பெற்றுக்கொண்டார். தமிழ் சினிமா விழாவில் நடிகர் புனித் குமார் கலந்து கொள்வது இதுவே முதன்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.   ![]()   ![]()   ![]()  | 
For Thala Thalapathy Fans
Sunday, July 22, 2012
இன்று வெளியானது முகமூடி இசை ...
Thursday, July 19, 2012
6 பேக் முயற்சியில் அஜித் .........
| அஜித் குமார் தன் புதிய படத்திற்காக 6 பேக் முயற்சியில் களமிறங்கியுள்ளார். இதனால் நீண்ட நேரம் உடற்பயிற்சி நிலையத்தில் செலவிடுகின்றார். | 
தல அஜித்குமாரின் பில்லா- 2, திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தை முடித்தவுடன் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்கத் தொடங்கினார். இப்போது படப்பிடிப்புகள் ஆந்திரா, மும்பை என இந்தியாவின் பிரதான நகரங்களில் நடந்து வருகின்றது.இப்படத்தின் கதைப்படி அஜித், 6 பேக் வைக்க வேண்டும் என்று இயக்குனர் விஷ்ணு தெரிவித்திருக்கின்றார். இதன்படி தல அஜித் நீண்ட நேரம் உடற்பயிற்சி நிலையத்தில் இருந்து கடுமையான உடற்பயிற்சி செய்து வருகின்றார். இப்படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்கின்றார். இப்படத்திற்கான துணை இயக்குனரும் அவரே. இவர்களுடன் இரண்டாம் கதாநாயகனாக ஆர்யாவும் இவருக்கு ஜோடியாக டாப்ஸியும் நடித்து வருகின்றனர். தீவிர உடற்பயிற்சியில் அஜித் ஈடுபட்டதன் விளைவாக தற்போது இன்னும் இளமையாக காட்சியளிக்கின்றார் என்று விஷ்ணு வர்தன் கூறியுள்ளார்.  | 
அஜித் பாராட்டிய “நான் ஈ” ....//////
| கொலிவுட்டில் நானி, சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றி நடைபோட்டுக் கொண்டிருக்கும் “நான் ஈ” படத்தை 'தல' அஜித் பாராட்டியுள்ளார். | |
தற்போதெல்லாம் 'நான் ஈ' படத்தின் இயக்குனர் ராஜமெளலியை போனில் யாராவது அழைத்தால், பல நேரங்களில் அவரது எண் பிஸியாக இருக்கிறது.![]() காரணம் ஒட்டுமொத்த தென்னிந்திய திரையுலகமும் படத்தினை பார்த்து விட்டு அவரது எண்ணை தொடர்பு கொண்டு அழைத்து புகழ்ந்து தள்ளுகிறார்களாம். பிரபாஸ், மகேஷ், ரவிதேஜா, வெங்கடேஷ், நாகார்ஜுனா, சித்தார்த், ராணா, விக்ரம், சூர்யா, கார்த்தி, தனுஷ், ரஜினி, இயக்குனர்கள் ராம் கோபால் வர்மா, ஷங்கர், லிங்குசாமி என்று அனைத்து தரப்பினரும் படம் பார்த்துவிட்டு ராஜமெளலியை தொடர்பு கொண்டு பாராட்டி இருக்கிறார்கள். தற்போது அந்த வரிசையில் இன்னொரு நட்சத்திரமும் சேர்ந்திருக்கிறார். அவர் தான் “தல” அஜித். 'நான் ஈ' படத்தினை பார்த்த அஜீத், இயக்குனர் ராஜமெளலியை தொடர்பு கொண்டு புகழ்ந்து தள்ளி விட்டாராம். அடுத்து இவர் நேரடி தமிழ் படம் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  | 
பிரிட்டனில் உருவாகவுள்ள யோஹன் முதல் பாகம் .....
| இளையதளபதி விஜய் நடிக்க உள்ள யோஹன் அத்தியாயம் ஒன்று படத்தின் முதல் பாகம் பிரிட்டனில் உருவாக உள்ளது. | 
கெளதம்மேனன் இயக்கத்தில், விஜய் நடிக்க இருக்கும் 'யோஹன்' படத்தில் நடிக்க ஹாலிவுட் நடிகையொருவரை படக்குழுவினர் தேடி வருகின்றார்கள்.![]() யோஹன் என்ற பெயர் சர்வதேச அளவில் உள்ள பெயர் என்பதாலும் படத்தின் கதைப்படி விஜய் சர்வதேச உளவாளியாக நடிக்கிறார் என்பதாலும் படம் முழுவதும் அமெரிக்கா, ஐரோப்பாவில் உருவாக உள்ளது. கதாநாயகி தவிர, வெளிநாட்டில் நடைபெறுவது போல கதை இருப்பதால் படத்தில் நடிக்க வெளிநாட்டு நடிகர், நடிகைகளிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். மேலும் யோஹன் படம் பல்வேறு பாகங்கள் அடங்கியது என்பதால் முதல் பாகத்தின் வரவேற்பைத் தொடர்ந்து இரண்டாம், மூன்றாம் பாகங்கள் இருக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் யோஹன் முதல் பாகம் பிரிட்டனில் தயாராக இருக்கிறது. படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார்.  | 
Friday, July 13, 2012
யோஹனில் ஹாலிவுட் நடிகை ........
| விஜய் நடிக்க உள்ள யோஹன் அத்தியாயம் ஒன்று படத்தில் ஹாலிவுட் நடிகையை நடிக்க வைக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. | 
கொலிவுட்டில் இளையதளபதி விஜய்- கௌதம் மேனன் கூட்டணி, விரைவில் யோஹன் அத்தியாயம் ஒன்று என்ற படத்தின் மூலம் இணைய உள்ளது. இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப் படத்தில் இளைய தளபதி சர்வதேச  உளவாளியாக நடிக்க உள்ளார்.அதன் முதற்படியாக படத்துக்கு யோஹன் என பெயரிடப்பட்டுள்ளது. இது உலகளவில் நன்கு பிரபலம் அடைந்த பெயர் ஆகும். தற்போது யோஹன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஹாலிவுட் நடிகையை நடிக்க வைக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. அதற்குண்டான பணிகளில் கவுதம் மேனன் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது கொலிவுட்டை பொறுத்தவரை ஹாலிவுட் நடிகைகள் உலாவ ஆரம்பித்து விட்டனர். ஏற்கனவே எமி ஜாக்சன், ப்ரூனா அப்துல்லா ஆகியோர் வெளிநாட்டு படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் நுழைந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  | 
ஊடகத்தினருக்காக திரையிடப்பட்ட அஜித்தின் ''பில்லா-2'' படம் .......
| பிரமாண்ட பொருட் செலவில், 'தல' அஜித்தின் நடிப்பில் உருவான 'பில்லா-2' படம், ஊடகத்தினருக்காக சென்னை ஃபோர் பிரேம்ஸ் திரையரங்கில் திரையிடப்பட்டது. | 
வைட் ஆங்கிள் கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை 'உன்னைப் போல் ஒருவன்' படத்தை இயக்கிய ஷக்ரி டோலட்டி இயக்கியுள்ளார். விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெற்றி பெற்ற 'பில்லா' படத்துக்கு பின்பு, 'பில்லா எப்படி சர்வதேச தாதாவாக உருவெடுக்கிறார்' என்பதை இந்த 'பில்லா-2' படத்தில் அதிரடி ஆக்ஸன் காட்சிகளோடு சொல்லியிருக்கிறார்கள்.அகதியாக இருந்து தாதா டேவிட் பில்லாவாக அவதரிக்கும் ஆர்ப்பாட்டமான கேரக்டரில் அஜித், அவருக்கே உரிய ஸ்டைலில் படத்தின் ஆரம்பம் முதல் க்ளைமாக்ஸ் வரை மிரட்டியிருக்கிறார். அஜித்துடன் இணைந்து பார்வதி ஓமனக்குட்டன், பிரேசில் அழகி ப்ருனா அப்துல்லா இருவரும் முக்கியமான ரோல்களில் நடித்துள்ளார்கள். மனோஜ் கே ஜெயன், சுதான்ஷு பாண்டே, வித்யுத் ஜாம்வால் சர்வதேச கடத்தல் புள்ளிகளாக வந்து 'பில்லா' அஜித்துடன் மோதுகிறார்கள். சர்வதேச குற்ற சாம்ராஜ்யத்தை கைப்பற்ற திட்டமிடுகிறார் பில்லா நாயகன் அஜித். பில்லாவை வீழ்த்த அரசியல்வாதிகளும், சர்வதேச தாதாக்களும் வியூகம் அமைக்கிறார்கள். எப்படி தன் எதிரிகளை பில்லா அஜித் அதிரடியாக சண்டையிட்டு வீழ்த்துகிறார்? என்பதை ஹாலிவுட் ஸ்டைல் ஆக்ஸன் படமாக ரசிகர்களுக்கு கொடுக்க முயற்சித்துள்ளார்கள். டேவிட் பில்லாவின் தாதா வாழ்க்கைக்கதையை இயக்குனர் ஷக்ரி டோலட்டியும், எரிக் பெல்பெர்க் இருவரும் உருவாக்கியுள்ளார்கள். ஷக்ரி திரைக்கதை அமைத்துள்ளார். படத்தின் கேரக்டர்களுக்கு இணையாக பெரும்பாலான காட்சிகளில் 'தட தடவென' துப்பாக்கிகள் முழங்கி பேசுகின்றன. படத்தில் அழகிய யுவதியாக பார்வதி ஓமனக்குட்டன் தோன்றியுள்ளார். நீச்சல் உடையில் கவர்ச்சி அழகி ப்ருனா சூடேற்றுகிறார். சண்டைக்காட்சிகளில் சீறிப்பாயும் 'புல்லட்'டாக அஜித் மாறியிருக்கிறார். தல அஜித் ரசிகர்களுக்கான படமாக 'பில்லா-2' வெளி வந்துள்ளது.  | 
விரைவில் யோஹனில் இணையும் விஜய் ...//
| கௌதம் மேனன் இயக்கவுள்ள “யோஹன் அத்தியாயம் ஒன்று” படத்தில் இளையதளபதி விஜய் விரைவில் இணையவுள்ளார். | 
இளையதளபதி விஜய், காஜல் அகர்வால் இணைந்து நடிக்கும் 'துப்பாக்கி' படத்தை பரபரப்பாக இயக்குனர் முருகதாஸ் படமாக்கி வருகிறார்.![]() இயக்குனர் முருகதாசுடன் 'துப்பாக்கி' படத்தின் மூலமாக முதன்முறையாக இணைந்துள்ள நடிகர் விஜய், இப்படத்துக்காக கடுமையாக உழைத்துள்ளார். அவருடைய சினிமா சரித்திரத்தில் 'துப்பாக்கி' முக்கியமான படமாக இருக்கும். இதுவரையில் துப்பாக்கி படத்தின் 90 சதவிகிதம் காட்சிகளை படமாக்கியுள்ளார்கள். விரைவில் துப்பாக்கி படத்தின் பாடல் காட்சியில் விஜய் நடிக்கிறார். 'துப்பாக்கி' படத்தின் காட்சிகளில் நடித்து முடித்த பின்பு, இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் 'யோஹன் அத்தியாயம் ஒன்று' படத்தில் நடிக்க மும்முரமாக விஜய் களமிறங்குவார் என்கிறது கொலிவுட் வட்டாரம்.  | 
Monday, July 9, 2012
ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கிய இளைய தளபதி ...
| தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு ரூ.10 லட்சம் செலவில் இளைய தளபதி விஜய் நோட்டுபுத்தகங்கள், பரிசுகள் வழங்கினார். | 
கடந்த பல வருடங்களாக இதுபோன்ற உதவிகளை இளையதளபதி விஜய் செய்து வருகின்றார்.![]() இந்த ஆண்டும் 200 குழந்தைகளுக்கு ரூ. 10 லட்சம் கல்வி உதவித்தொகையும் 5 லட்சம் ஏழை மாணவ- மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கினார். அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இந்த கல்வி உதவித்தொகையை விஜய் வழங்கினார். புதுச்சேரியில் கடந்த 10, 12 வகுப்புகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ- மாணவிகளுக்கும் தமிழ் பாடத்தில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ- மாணவிகளுக்கும் வெள்ளிப்பதக்கம், கேடயம், சால்வை அணிவித்து அவர்களை கௌரவப்படுத்தினார் இளைய தளபதி. பின்னர் அம்மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் நன்றாக படித்து பெரிய பொறுப்புக்களுக்கு வரவேண்டுமென அவர்களிடம் கேட்டுக்கொண்டார். இதுதவிர தளபதி விஜய்யின் வேண்டுகோளுக்கிணங்க ஏழை- எளிய மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் அனைத்து உதவிகளையும் அனைத்து மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், இளைய தளபதி மக்கள் இயக்க தொண்டர்கள் செய்து வருகின்றனர்.   ![]()  | 
Friday, July 6, 2012
இளைய தளபதியின் கார் மோகம் ....///
| திரையுலக நடிகர்களுக்கு பொதுவாக சொகுசு கார்கள் மீது மோகம் இருக்கும். இதில் நடிகர் விஜய் சற்று வித்தியாசமானவராக திகழ்கின்றார். | 
சொகுசு கார்கள், மற்றபடி புதிய கார்கள் என தன் கைக்கு எது கிடைத்தாலும் அதை ஒருமுறை ஓட்டி மகிழ்கிறார் இளைய தளபதி.![]() தனது நண்பர்கள் யாரேனும் புதிதாக கார்கள் வாங்கியிருப்பதாக விஜய்யிடம் சொன்னால், உடனே அவரை காருடன் வீட்டிற்கு வரச்சொல்லி விஜய் ஓட்டி மகிழ்கின்றார். அந்த வகையில் கொமெடி நடிகர் புரோட்டா சூரி, தான் புதிய கார் ஒன்றை வாங்கியிருக்கும் சந்தோஷத்தை விஜய்யிடம் பகிர்ந்தார். உடனே காரை வீட்டிற்கு கொண்டு வரச்சொல்லியிருக்கிறார் விஜய். சூரி வீட்டிற்கு வந்ததும் தன் வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிறிது நேரம் காரை ஓட்டிப் பார்த்து மகிழ்ந்துள்ளார். பின்பு சூரிக்கு கொஞ்சம் பணமும் கொடுத்து கார் வாங்கியதற்காக வாழ்த்து சொல்லி வழியனுப்பி வைத்திருக்கிறார் இளைய தளபதி.  | 
Sunday, July 1, 2012
விஜய்க்காக சூர்யாவின் ரசிகரை கிண்டல் செய்த முருகதாஸ் ...
| ட்விட்டரில் இப்போது சூடு பறப்பது விஜய் - சூர்யா ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மோதல் தான். | 
விஜய் நடிக்க முருகதாஸ் இயக்கும் படத்திற்கும், சூர்யா நடிக்க கேவி ஆனந்த் இயக்கும் மாற்றானும் வரும் ஆகஸ்ட் 15ஆம் திகதி வெளியாகின்றன.![]() ஒரு தீவிர சூர்யா ரசிகர் முருகதாஸுக்கும் கேவி ஆனந்துக்கும் இப்படி ட்வீட் செய்திருந்தார்: இந்த ஆண்டு மாற்றான் ஆண்டு. மற்றவர்கள் ஒதுங்கி நில்லுங்க. மாற்றான் = க்ளாஸ் + மாஸ்! இதைக் கண்டு கடுப்பாகி விட்ட ஏ ஆர் முருகதாஸ், பாப்பா.. தள்ளிப் போய் விளையாடு! என்று பதில் அனுப்பி உள்ளார். இந்த ட்விட்டர் போரை கவனித்து வந்த நடிகர் பிரேம்ஜி இடையில் புகுந்து 'சூப்பர் ரிப்ளை தலைவா' என முருகதாஸுக்கு ஆதரவுக் குரல் கொடுத்துள்ளார். இத்தனைக்கும் முருகதாஸ் சூர்யாவின் ஆஸ்தான இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது.  | 
கொமெடி இல்லாத ஆக்ஷன் படம் தான் பில்லா 2 ...
| விரைவில் வெளியாக உள்ள பில்லா 2 படத்தில் கொமெடியே இல்லை என்ற புதிய தகவல் வெளிவந்துள்ளது. | 
முன்னணி நடிகர்கள் பலரும் தங்களுக்கென்று ஒரு கொமெடி நடிகரை பக்கத்திலேயே வைத்துக் கொண்டிருப்பார்கள்.![]() அந்த வரிசையில் முன்னணி இடத்தில் இருக்கும் அஜித் கொமெடியையோ, கொமெடியர்களையோ நினைத்து பெரிதாக அலட்டிக் கொள்கிற ரகம் இல்லை. அதனால் தானோ என்னவோ, பில்லா 2 படத்தை எந்த கொமெடி காட்சிகளும் இல்லாமல் உருவாக்கியிருக்கிறார்களாம். ஆம் விரைவில் வெளிவரப்போகும் பில்லா-2வில் கொமெடியே இல்லை. படத்தின் கதை முழுக்க முழுக்க மாஃபியாவை பற்றியது. இதில் எதற்கு தேவையில்லாமல் கொமெடியை நுழைக்க வேண்டும் என்பதால் இந்த முடிவினை எடுத்தாராம் சக்ரிடோலட்டி.  | 
இளமையாக மாறுகிறார் அஜித் ....
Subscribe to:
Comments (Atom)

 
 
 




விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெற்றி பெற்ற 'பில்லா' படத்துக்கு பின்பு, 'பில்லா எப்படி சர்வதேச தாதாவாக உருவெடுக்கிறார்' என்பதை இந்த 'பில்லா-2' படத்தில் அதிரடி ஆக்ஸன் காட்சிகளோடு சொல்லியிருக்கிறார்கள்.
 



+of+80_ajith-011-wallpaper-.jpg)