

ஊடகங்களுக்கு வழங்காத நிலையில் பில்லா 2 புகைப்படங்கள் வெளியானது படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. |
| கொலிவுட்டில் அஜீத்தின் பில்லா- 2 படப்பிடிப்பு கடந்த சூலை மாதம் தொடங்கியது. வருகிற மே மாதம் படத்தை திரையிட படக்குழு முடிவுசெய்துள்ளது. இதில் அஜீத் ஜோடியாக பார்வதி ஒமனகுட்டன் நடிக்கிறார். பிரபு, ரகுமான், புரூனா அப்துல்லா, வித்யுத் ஜம்வால், மனோஜ் கே.ஜெயன் ஆகியோரும் நடிக்கின்றனர். யுவன் சங்கர்ராஜா இசையமைக்கிறார். சக்ரி டோலட்டி இயக்குகிறார். ரூ.30 கோடி பட்ஜெட்டில் தயாராவதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் கதை மற்றும் நடிகர், நடிகைகளின் கெட்டப்புகள் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தன. இதுவரை பில்லா 2 புகைப்படங்களை பத்திரிகைகளுக்கு அளிக்கவில்லை. ஆனால் இப்படத்தின் புகைப்படங்கள் திடீரென இணையதளத்தில் வெளியாகியுள்ளன. இப்படங்களை பார்த்து அஜீத் மற்றும் இயக்குனர் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் அதிர்ச்சியாகியுள்ளனர். புகைப்படங்களை வெளியிட்டது யார் என்று விசாரணை நடைபெற்று வருகிறது. |


No comments:
Post a Comment