| விஷ்ணுவர்தன் இயக்கும் திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடி அமலாபால் நடிக்கவுள்ளார். |
மைனா, தெய்வத்திருமகள் திரைப்படங்கள் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை அமலா பால்.![]() இத்திரைப்படங்களின் வெற்றியால் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் என அனைவரும் அமலா பாலின் திகதிக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். இதனால் மற்ற நடிகைகள் மத்தியில் அமலா பால் மீது சிறு பொறாமை உள்ளது. நடிகர் அஜித் தற்போது பில்லா-2 திரைப்படத்தில் நடித்து வருகின்றார். அடுத்து விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார், இதில் அஜீத்துக்கு ஜோடி அமலாபால் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் ஓரிரு மாதங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. |
For Thala Thalapathy Fans
Wednesday, January 11, 2012
அஜீத்துடன் இணைகிறார் அமலாபால்........
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment