For Thala Thalapathy Fans



Friday, December 9, 2011

கமர்ஷியல் ரூட்டை விட மாட்டேன் – விஜய் பேட்டி....


ThalaThalapathi
கமர்ஷியல் ஹிட்ஸ் என்பது விஜய்க்கு அதிகம் பழக்கப்பட்டவைதான். ஆனால் ‘வேலாயுதத்தின்’ வெற்றி விஜய்யை ரொம்பவே உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. ஒரு மாலைப் பொழுதில் விஜய்யை சந்தித்த போது கலகலப்பாக பேச ஆரம்பிக்கிறார்…..
‘வேலாயுதம்’ மூலமாக இப்போ சூப்பர் ஹீரோவாகிட்டீங்களே….?
‘ஆஸாத்’ படம் வெளியான நேரத்திலேயே அந்த லைன் எனக்கு பிடிச்சுப் போச்சு. எனக்கு இப்ப இருக்கிற ஆக்ஷன் இமேஜ் அப்போ இல்ல. அதனால எதிர்காலத்துல பண்ணலாம்னு ஆசைப்பட்டேன்.
உடனே அப்பா அந்தக் கதைக்கான உரிமையை வாங்கி வைச்சிட்டாங்க. அதை அப்படியே நான் மறந்துட்டேன். இப்போ இயக்குநர் ராஜாவோடு சேர்ந்து இந்த லைனை படம் பண்ணலாம்னு யோசிச்சப்பதான், அந்த ‘ஆஸாத்’ கதை உரிமை நம்மகிட்ட இருக்குன்னு அப்பா சொன்னாங்க.
மூலக்கதையை மட்டும் எடுத்துட்டு இன்னிக்கு இருக்கிற ட்ரெண்ட்டுக்கேத்த மாதிரி படம் பண்ணியிருக்கோம். மக்களோட அங்கீகாரம் கிடைச்சதுல எங்களுக்கு ரொம்ப சந்தோஷம்.
ஒரு மாஸ் ஹீரோவாக இருந்தும் ‘வேலாயுதத்தை’ ரிலீஸ் பண்ண திரையரங்குகள் கிடைக்காம கஷ்டப்பட்டதாக ஒரு பேச்சு இருந்துச்சே, அது உண்மையா?
சினிமாவுல அவ்வப்போது சில பிரச்சினைகள் வரும். அதை உடனடியாக தீர்த்து வைப்பாங்க. இப்போ புதுசா ஒரு பிரச்சினை முளைச்சிருக்கு. முன்னாடியெல்லாம் பண்டிகைகளுக்கு பெரிய ஹீரோக்களின் படங்கள், அறிமுக நட்சத்திரங்களோட படங்கள்னு எல்லாவிதமான படங்களும் வெளியாகும்.
வந்த படங்கள்ல எது நல்லா இருக்குமோ அது சூப்பரா ஓடும். இப்ப திடீர்னு அதுக்கான வாய்ப்புகள் இல்லையோன்னு தோணுது.
பெரிய ஹீரோக்களின் படங்கள் வெளியாகும் போது இவரோட படம்தான் வரணும் அவரோட படங்கள் வரக்கூடாதுன்னு ஒரு சில வேலைகள் நடக்குது. முன்பு இருந்த ஆரோக்கியமான சூழ்நிலை இப்ப இல்லையோன்னு நினைக்கத் தூண்டுது.
இது மாறணும். பண்டிகை நாட்கள் மட்டுமில்ல மற்ற எல்லா நாட்களிலும் எல்லோருடைய படங்களும் வெளியாகி கொண்டாட்டமாக இருக்கணும். நிச்சயம் அந்த மாற்றம் வரும். இதை எனக்காக மட்டும் சொல்லல. மற்ற எல்லோருக்காகவும் சேர்த்துதான் சொல்றேன்.
உங்களோட கமர்ஷியல் ரூட்ல இப்படியொரு சமூகத்துக்கான மெஸேஜையும் இனிமேல் சேர்த்துக் கொடுக்கிற எண்ணமிருக்கா?
எல்லாம் தானாக அமையறதுதாண்ணா. நாம் ப்ளான் பண்ணினாகூட இப்படி சில சமயம் அமையாது. நேரம், அமையுற இயக்குநர், கதை இதையெல்லாம் பொறுத்து அமையறதுதான்.
உங்களோட படங்கள் ஒரே மாதிரியான ஸ்டைலில்தான் இருக்கும்னு ஒரே கமெண்ட்டாக இருக்கே?
புதுசு புதுசா முயற்சி பண்ணி, இந்த கமர்ஷியல் ரூட்டை விட்டு விலகி வந்து படம் பண்றதுல எனக்கு உடன்பாடு இல்ல. ஆஃப் பீட் படங்கள் பண்றதுலயும் எனக்கு விருப்பமில்ல.
நான் கமர்ஷியல் படங்கள்ல நடிச்சாலும், ஆஃப் பீட் படங்களை ரசிச்சுப் பார்ப்பேன். கமர்ஷியல் ப்ரேம் வொர்க்கை விட்டு விலகி படம் பண்ண மாட்டேன். ஆனால் அந்த ப்ரேமுக்குள்ளே என்னென்ன வித்தியாசங்கள் பண்ண முடியுமோ அதையெல்லாம் முயற்சி பண்ணுவேன்.
பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது எழுந்த கேள்விக்கு ‘எனக்கு சிக்ஸ் பேக் இல்ல. சிங்கிள் பேக்’தான்னு சொன்னீங்களே. படம் ஜெயிக்க சிக்ஸ் பேக் வேண்டாம் சிங்கிள் பேக்கே போதும்னு நினைக்கிறீங்களா?
ஒரு படம் ஜெயிக்கணும்னா ஸ்டோரி பேக் நல்லா இருந்தா போதும். படம் பட்டையைக் கிளப்பும்.
‘நண்பன்’ அனுபவம் எப்படியிருக்கு?
ஷங்கர் ரொம்ப பெர்ஃபெக்ட். நல்ல மனுஷர். இவ்வளவு நாள் இவரோட சேர்ந்து படம் பண்ண முடியாம போச்சேன்னு இப்ப தோணுது.
தலயின் ‘மங்காத்தா’வுல உங்க படக் காட்சி இருந்துச்சு. இப்ப ‘இளையதளபதி’ படத்துல ‘தல’ படப் பாடல் கேட்குது. என்னங்கண்ணா நடக்குது?
‘மங்காத்தா’வுல என் படத்தோட காட்சியைக் காட்டினதால, என் படத்துல ‘மங்காத்தா’ பாடலை வைக்கல. ஒரு சீன் பின்னணியில ரேடியோவுல பாட்டு கேட்கிற மாதிரி இருந்தா, அந்தப் பாடலை படத்தோட எஃபெக்ட்ஸ் நடக்கும்போதுதான் மிக்ஸ் பண்ணுவாங்க.
அந்த நேரத்துல உதவி இயக்குநர்கள் என்கிட்ட வந்து, ‘அண்ணே அந்த சீன் பின்னணியில் ரேடியோ பாட்டு கேட்கும். அதுக்கு நாம ‘மங்காத்தா’ படத்தோட பாட்டை யூஸ் பண்ணலாமா?’னு கேட்டாங்க. ‘இதை நீங்க என்கிட்ட கேட்கவே தேவை இல்ல. தாராளமா யூஸ் பண்ணுங்க. நல்ல விஷயம். ஆரோக்கியமாக இருக்கும்’னு சொன்னேன்.

No comments:

Post a Comment